உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்





2

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

ஒலிக்கிறது. இதனால் மெய்யொலிகள் இயங்க உயிரொலிகள் காரணம் என்பதால் உயிரை முன்வைத்து உயிர்மெய் என்று கூறுகிறோம்.

இவ்வாறு, அனைத்து எழுத்துகளும் சேர்ந்து மொத்த எழுத்துகளின் எண்ணிக்கை 247

ஆகிறது.

உயிர் எழுத்துகள்

12

மெய் எழுத்துகள்

உயிர்மெய் எழுத்துகள்

ஆய்த எழுத்து

T

1

18

216

மொத்தம்

1.1.1 குறிலும் நெடிலும்

247

எழுத்துகளை முதலெழுத்து, சார்பெழுத்து என இருவகைப்படுத்தலாம். உயிர்-12, மெய்-18 ஆக 30 எழுத்தும் முதலெழுத்துகள் ஆகும். இவற்றைச் சார்ந்து வருபவை சார்பெழுத்துகள் ஆகும்.

தமிழ்மொழியிலுள்ள சொற்களை ஒலிப்பதற்கு, முதல் எழுத்துகளைச் சரியாக ஒலிக்க பயிற்சி செய்தாலே போதுமானது. உயிர் எழுத்துகளை நீட்டியும், குறுக்கியும் ஒலிக்க வேண்டும். மெய் எழுத்துகள் அனைத்தையும் ஒரே அளவில் ஒலிக்க வேண்டும்.

இவ்வாறு உயிர் எழுத்துகள், ஒலிக்கும் அளவைப் பொறுத்து குறில், நெடில் என இரண்டாகப் பிரியும். இதன்படி,

அ, இ, உ எ, ஒ என்ற ஐந்து எழுத்தும் குறில் எழுத்துகள்

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்ற ஏழு எழுத்தும் நெடில் எழுத்துகள்

இந்த உயிர் எழுத்துகள் மெய்எழுத்தோடு சேர்ந்து பிறக்கும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துகள், உயிர் எழுத்தின் இயல்பையே கொண்டு ஒலிக்கும்.

'க்' என்னும் மெய் எழுத்தோடு 'அ', 'இ', 'உ', 'எ', 'ஒ' ஆகிய குறில் எழுத்துகள் சேரும்போது, உயிர்மெய்க் குறில் எழுத்துகள் தோன்றும்.

அதே மெய்யோடு 'ஆ', 'ஈ', 'ஊ', 'ஏ', 'ஐ', 'ஓ', 'ஔ' ஆகிய நெடில் எழுத்துகள் சேரும்போது உயிர்மெய் நெடில் எழுத்துகள் தோன்றும்.

மெய் எழுத்துகளில் குறிலும், நெடிலும் இல்லை. எனவே, உயிர் எழுத்துகளுடன் சேரும்போது அவற்றின் பண்பினையே உயிர்மெய் எழுத்துகள் பெறுகின்றன.