உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







பாருங்கள். என்னென்ன

மேலே கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டுகளைச் சொல்லிப் பாருங்கள். மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன?

முதல் எடுத்துக்காட்டில், நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது, புதிதாக ஓரெழுத்து தோன்றியுள்ளது. 'திருக்குறள்'. இது, 'தோன்றல்' விகாரம்.

இரண்டாவது எடுத்துக்காட்டில், நிலைமொழியின் இறுதியிலுள்ள எழுத்து, வேறோர் எழுத்தாகத் திரிந்துள்ளது. 'மட்குடம்'. இது, 'திரிதல்' விகாரம்.

மூன்றாவதாக உள்ள எடுத்துக்காட்டில், நிலைமொழியின் இறுதியிலுள்ள எழுத்து, மறைந்துள்ளது. 'மர(ம்)வேர். இது, 'மறைதல் அல்லது கெடுதல்' விகாரம்.

இவ்வாறு மாறுபட்டு வரும் புணர்ச்சி வடிவங்களை, விகாரப் புணர்ச்சி என்கிறோம்.

நாம் நாள்தோறும் பேசும்போதும் எழுதும்போதும் நம்மையறியாமலே, பல்வேறு புணர்ச்சி வடிவங்களைப் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். அவற்றைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்காகவே புணர்ச்சி விதிகள் உள்ளன. அவற்றில் நம் அன்றாட வாழ்வில் அடிக்கடி பயன்படுத்தும் சொற்றொடர்ப் புணர்ச்சிகளை அறிந்துகொள்வோம்.

4.3 உயிரீறு, மெய்யீறு

இரு சொல் இணைந்தால், புணர்ச்சி என்று பார்த்தோம். 'அணி' என்னும் சொல்லை ஒலித்துப் பாருங்கள். அச்சொல்லில் முதலில் உள்ள எழுத்து, 'அ'. ஈற்றில் (இறுதியில்) உள்ள எழுத்து, 'ணி'. அதாவது, ண் + இ. எனவே, அணி என்னும் சொல், உயிரெழுத்தை முதலாகக் கொண்டுள்ளது. அதன் ஈற்றெழுத்தும் உயிரெழுத்தில் முடிகிறது. ஆகையால், 'அணி' என்னும் சொல்லை உயிர்முதல் உயிர்ஈறு எனக் குறிப்பிடு வோம்.

'பொன்' என்னும் சொல்லையும் இவ்வாறே பிரித்தோமானால், முதலில் நிற்கும் 'பொ' என்னும் எழுத்து, ப் + ஒ என ஈரெழுத்தால் ஆனது. ஆகவே, ஒலிக்கும்போது முதலில் வரும் எழுத்து 'ப்'. அச்சொல்லின் இறுதியில் வரும் எழுத்து, 'ன்' என்னும் மெய்யெழுத்தால் ஆனது. எனவே, 'பொன்' என்னும் சொல்லை மெய்ம்முதல் மெய்யீறு எனக் குறிப்பிடுவோம். மேலும், சில எடுத்துக்காட்டுகளைக் கவனியுங்கள்.

உயிர்முதல் உயிர் ஈறு -

அம்பு (அ + ம் + ப் + உ)

ஏணி (ஏ + ண் + இ

ஔவை (ஔ + வ் + ஐ)

மெய்ம்முதல் மெய்யீறு

கடல் (க் + அ + L + ல்)

தமிழ் (த் + அ + ம் + இ + ழ்)

வளம் (வ் + அ + ள + ம்)