உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

105







இப்போது ஒவ்வொரு சொல்லையும் இவ்வாறு பிரித்துப் பார்த்தால், உயிரீறு, மெய்யீறு எது என எளிதாக அடையாளம் காண இயலும்.

சிந்தனை வினா

உங்களுடைய பெயர் உயிர்முதல் உயிரீறா, மெய்ம்முதல் மெய்யீறா எனக் கண்டுபிடியுங்கள்.

சொற்புணர்ச்சிக்கு இந்த உயிரீறும் மெய்யீறும் இன்றியமையாதவை. இவை எவ்வாறு புணர்ந்துவரும் என்பதற்கு விதிகள் உள்ளன. இதேபோல் குற்றியலுகரச் சொற்கள், பல சில என்னும் சொற்கள், திசைப்பெயர்கள், பூப் பெயர்கள், பண்புப்பெயர்கள் என்பன புணர்ந்து வருவதற்கும் புணர்ச்சி விதிகள் உள்ளன.

4.4 வேற்றுமைப் புணர்ச்சி

'படம் பார்த்தான்'

இத்தொடரில்,

விரிவுபடுத்தும்போது,

இரண்டாம் வேற்றுமை உருபான 'ஐ' மறைந்துள்ளது. இதனை

'படத்தைப் பார்த்தான்'

என விரியும். இவ்வாறு, இரண்டுமுதல் ஏழுவரை கொண்ட வேற்றுமைகளின் பொருள் விளங்குமாறு நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் சேர்வதனை வேற்றுமைப் புணர்ச்சி என்கிறோம். (முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபு இல்லை.)

வேற்றுமையின் பொருள்பட, நிலைமொழியும் வருமொழியும்

புணர்வதே வேற்றுமைப் புணர்ச்சி.

4.5 அல்வழிப் புணர்ச்சி

வேற்றுமை அல்லாதவழி, நிலைமொழியும் வருமொழியும் புணர்ந்து வருவது அல்வழிப் புணர்ச்சியாகும். (அல்வழி = அல்லாத வழி)

வேற்றுமைக்குரிய சொற்றொடர்கள் அல்லாமல்,

தொடர்களின் புணர்ச்சியைக் கூறுவது, அல்வழிப் புணர்ச்சியாகும்.

4.5.1 தொகைநிலைத் தொடர்கள்

தொகைநிலை,

தொகாநிலைத்

தொகைநிலைத் தொடர்கள் ஆறு வகைப்படும்.