உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







4.7.1 குற்றியலுகர ஈற்றுத் திசைப்பெயர்ப் புணர்ச்சி

கெடும்.

வடக்கு + கிழக்கு = வடகிழக்கு

வடக்கு + நாடு = வடநாடு

இவ்வாறு, 'கு' என்னும் ஈற்று உயிர்மெய்யும் அதன் அயலில் நின்ற ககர மெய்யும் (க்)

தெற்கு + கிழக்கு = தென்கிழக்கு

மேற்கு + காற்று = மேல்காற்று

என, ஈற்றுக்கு அயலிலுள்ள றகர மெய், னகர மெய்யாகவும் லகர மெய்யாகவும் திரியும்.

கிழக்கு + நாடு = கீழ்நாடு +

என, 'கிழக்கு' என்பதிலுள்ள ஈற்று உயிர்மெய்யும் ககர ஒற்றும் அகரமும் கெட்டு முதல் நீண்டும் புணரும்.

4.8 மெய்யீற்றுப் புணர்ச்சி

நிலைமொழியின் இறுதி எழுத்து, மெய்யெழுத்தாக இருந்தால் எப்படிப் புணரும் என்பதைப் பின்வரும் எடுத்துக்காட்டுகள்வழிக் காணலாம்.

4.8.1 வேற்றுமைப் புணர்ச்சியில் ணகர, னகர ஈறுகள்

வல்லினம்

கண் + செவி

= கட்செவி

பொன் + தாலி

= பொற்றாலி

வேற்றுமைப் புணர்ச்சியில் நிலைமொழி ஈற்றெழுத்துகள் ணகரமெய், னகரமெய் ஆக வரும்போது. வருமொழி முதல் வல்லினம் (ச, த) ஆக இருந்தால் டகரமாகவும், றகரமாகவும் மாறுகின்றன.

மெல்லினம்

கண் + மணி

கண்மணி

பொன் + மணி

= பொன்மணி

இவை

இரண்டும் மெல்லினம். இவ்வாறு வேற்றுமைப் புணர்ச்சியில் மெல்லினம் வரும்போது, இயல்பாகப் புணர்கின்றன.

இடையினம்

மண் + மனம்

= மண்வன்மை

பொன் + வன்மை

=

பொன்வன்மை