112
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
என வேற்றுமையில் வல்லினம் வர ணகர னகரங்கள் முறையே டகர றகரங்களாகத் திரிந்தன.
தேன் + மொழி
தேன் + மொழி
தேன்மொழி தேமொழி
இவ்வாறு அல்வழிப்புணர்ச்சியில் னகரத்தின் முன் மெல்லினம் வரின் அந்த னகரம் இயல்பாதலும் உண்டு; அழிதலும் உண்டு.
தேன் + மலர்
தேன் + மலர்
||
||
தேன்மலர் தேமலர்
இவ்வாறு வேற்றுமைப் புணர்ச்சியிலும் னகரம் இயல்பாதலும் உண்டு; அழிதலும் உண்டு.
தேன் + குழம்பு
தேன்குழம்பு – இயல்பாயிற்று.
||
=
தேக்குழம்பு – வலிமிக்கது.
||
தேங்குழம்பு – மெலிமிக்கது.
இவ்வாறு அல்வழிப் புணர்ச்சியில் னகரத்தின் முன் வல்லினம் வரின் அந்த னகரம் இயல்பாதலும் உண்டு; அன்றி, அது கெட்டு, வந்த வல்லினம் மிகுதலும் உண்டு; மெல்லினம் மிகுதலும் உண்டு.
தன் + பகை
|| _||
தன்பகை
தற்பகை
என் + பகை
என்பகை
எற்பகை
இவ்வாறு வல்லினம் வர, ன் உறழ்தலும் உண்டு.
4.8.4 வேற்றுமைப் புணர்ச்சியில் லகர, ளகர ஈறுகள்
கால் + பொறை
காற்பொறை...ல் – ற் ஆனது.
முள் + குறை
இது வேற்றுமைப் புணர்ச்சி.
கால் + குறிது
முள் + குறிது
II
||
முட்குறை...ள் - ட் ஆனது.
கால்குறிது, காற்குறிது
முள்குறிது, முட்குறிது
இவ்வாறு அல்வழிப்புணர்ச்சியில் வல்லினம் வர, ல், ள் உறழ்ந்து வந்தன.
கல் + நெரிந்தது = கன்னெரிந்தது...ல் - ன் ஆனது.
வாள் + மாண்டது = வாண்மாண்டது...ள் - ண் ஆனது.