உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







ஏ) பின்வரும் கதையினைச் சரியான முறையில் சிறுசிறு உரைப்பகுதிகளாகப் பிரித்து எழுதுக.

மகேந்திரபுரி அரசருக்கு மகன்கள் மூவர் இருந்தனர், தமக்குப் பின்னே நாட்டை யார் கையில் ஒப்படைப்பது என்பதற்காக அவர்களை அழைத்து ஒரு போட்டி வைத்தார். "காட்டிற்குச் சென்று ஒரு சாக்கு நிறைய இரு வாரத்திற்குத் தேவையான உணவை கொண்டு வந்து ஆளுக்கோர் ஏழைக்கு அவ்வுணவைக் கொடுக்கவேண்டும். ஆனால், மூட்டையில் என்ன இருக்கிறது எனக் காட்டத்தேவையில்லை" என்றார் அரசர். மகன்கள் மூவரும் காட்டிற்குச் சென்றனர். முதலாமவன் மரத்தில் ஏறி நல்ல பழங்களைப் பறித்து மூட்டை கட்டினான். இரண்டாமவன் சோம்பல்பட்டுக் கீழே விழுந்து கிடந்த அழுகிய பழங்களைப் பொறுக்கி மூட்டை க்கொண்டான். மூன்றாமவனோ ஏழைக்குத் தானே கொடுக்கப் போகிறோம் என்று அலட்சியமாகக் கீழே கிடந்த குப்பைகளை அள்ளி மூட்டையாகக் கட்டினான். மூவரும் அரசரிடம் திரும்பி வந்தனர். அவர்கள் மூட்டைகளைத் திறந்து பார்க்காமலேயே அரசர் அந்த ஏழைகள் நீங்கள்தாம். நீங்கள் கொண்டு வந்த உணவுப் பொருள்களை நீங்களே சாப்பிடுங்கள் என்று கூறினார். நல்ல பழங்களைக் கொண்டுவந்த மகன் பழங்களோடு அரசாட்சியையும் பெற்றான். மற்ற இருவரும் தங்களது தவற்றை உணர்ந்து வருந்தினர்.