தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
151
விடைகள்
அ) தொடருக்கேற்ற சரியான சொல்
1) ஆனால் 2) ஆகையால் 3) ஏனெனில் 4) ஆனாலும் 5) அதனால்
ஆ) தொடர்களுக்குப் பொருத்தமான இணைச்சொற்கள்
1) கண்ணும்கருத்துமாக 2) சீரும்சிறப்புமாக 3) காலையும்மாலையும்
4) எலியும்பூனையும் 5) வெள்ளைவெளேர் 6) பச்சைப்பசேல்
பொருத்துக.
1. குறுக்கும்நெடுக்கும்
2. விடு
3. கன்னங்கரேல்
4. பொருட்டு
5. ஈடும்எடுப்பும்
எதிரிணைச்சொல்
துணைவினைச்சொல்
செறியிணைச்சொல்
தனிச்சொல்
நேரிணைச்சொல்
படத்திற்குப் பொருத்தமான இணைப்புச்சொல் கொண்ட தொடர்கள்
1. மழை வருவதுபோலிருந்தது. ஆகவே, கண்ணன் விரைவாக நடந்தான்.
2. சாலையோரத்தில் ஒருவர் மயங்கிக் கிடப்பதை அவன் கண்டான். எனவே, அவருக்கு உதவ நினைத்தான்.
3. கண்ணன் மயக்கமடைந்தவருக்கு முதலுதவி செய்தான். ஆனால், அவர் கண் திறக்கவில்லை.
4. கண்ணன், அவரைக் காப்பாற்ற எண்ணினான். ஆகையால், உடனடியாக அவசர ஊர்தியை வரவழைத்தான்.
5. மருத்துவர்கள், மயக்கமடைந்தவருக்கு உரிய சிகிச்சை அளித்தனர். அதனால், அவர் பிழைத்துக்கொண்டார்.
உ) இருதொடரையும் பொருத்தமான இணைப்புச் சொற்களால் இணைத்தல்.
(அதனால், மேலும், உம், அல்லது, ஆனால்)
1. மழை நின்றுவிட்டது ஆனால், வெளியில் செல்ல முடியவில்லை.
2. நீங்கள் தேநீர் அல்லது இளநீர் குடிக்கிறீர்களா?
3. செழியனும் அமுதனும் எழுதுகிறார்கள்.