உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

157






இப்போதுதான், அப்பா வந்தார் என்று தம்பி சொன்னான்.


காற்புள்ளி இப்படி இடும்போது அங்குச் சொற்களுக்கிடையே தொடர்பினை அக்குறியீடு ஏற்படுத்தும்.

இடைவெளிவிட்டுப் படிக்கவேண்டிய இடங்கள்

சில தொடர்களிலுள்ள சொற்களை இடைவெளிவிட்டும் நிறுத்தியும் படிக்கவேண்டும். இதனால், பொருள் தெளிவு ஏற்படும். எடுத்துக்காட்டாக, 'கண்ணா வா' இச்சொற்றொடரைச் சேர்த்துப் படித்தால் என்னவாகும்? ஏதோ ஒரு செயலைக் கண்ணன் செய்ததுபோலவும், அதனைத் தெரிந்துகொள்ளும் ஆவலில் 'கண்ணாவா இப்படிச் செய்தான்' என்ற பொருளையும் தோற்றுவிக்கிறது. அவ்வாறின்றி, 'கண்ணா / வா' என குறியீட்டின் பின் சற்று இடைவெளிவிட்டு நிறுத்திப் படித்தால், கண்ணன் என்பவனை வரச்சொல்வதுபோல் பொருள் தருகிறது. ஆகையால், எங்கெங்கு இடைவெளிவிட்டும் தெரிந்துகொள்வோம்.

1) விளி வேற்றுமை ஏற்ற சொற்கள்

அம்மா / வா

நிறுத்தியும்

2) எழுவாய் அடுத்துச் சொற்கள் வரும் தொடர்கள்

படிக்கவேண்டும்

ஆசிரியர்/ தம் மாணவரைப் பார்த்துப் படிக்குமாறு சொன்னார்.

3) 'உம்' இடம்பெறும் தொடர்கள்

என்பதை

பெரியார்/பெண்விடுதலைக்காகவும்/ சமூகத்திற்காகவும் / அரும்பாடுபட்டார்.

4) மேற்கோள் குறியுள் அமைந்த தொடர்கள்

இனித்

அம்மாவைப் பார்த்த/ குழந்தை/"என்னைவிட்டு/எங்கே சென்றாய்?"/ என்று கேட்டது.

5) பல பொருள்கள் அடுக்கிவரும் தொடர்கள்

கண்ணன்/ தன் சிறிய பையில்/ புத்தகம்/ எழுதுகோல்,/ அழிப்பான்,/ அளவுகோல், / குறிப்பேடு அனைத்தையும் எடுத்துவைத்தான்.

6) வினையெச்சங்கள் தொடர்ந்து வரும் தொடர்கள்

கவிதா/ பள்ளிக்குச் சென்று/ தன் மகளைப் பார்த்து/ நண்பகல் உணவு அளித்துவிட்டுத் திரும்பினாள். (இறுதியாக

வரும்

வினையெச்சத்தை

வினைமுற்றுடன் சேர்த்தே கூறவேண்டும். )

7) பெயரடைகள் அடுக்கிவரும் தொடர்கள்

உயரமான/ பரந்த /பெரிய /மலையின்கண்/ சிறிய கோவில்