உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







8) எண்ணுப்பெயருக்குப்பின் பெயரடை அமைந்த தொடர்கள்

நான்கு/ பெரிய பறவைகள்

மூன்று / சிறிய நூல்கள்

6.1.1 சொற்பிரிப்பு, சொற்சேர்க்கை முறைகள்

சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் எழுதுதல் மொழியில் முக்கியமான ஒரு பகுதியாகும். உதாரணத்திற்குக் கதை ஒன்றைப் பார்க்கலாம்.

கண்ணன் பள்ளியில் படிக்கும் மாணவன். அவனுக்கு லட்டு சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். தினமும் லட்டு சாப்பிட்டுக் கொண்டே இருப்பான். அதிகமாக இனிப்பு சாப்பிடுவது உடலுக்கு நல்லது இல்லை. அவனை எப்படித் திருத்துவது என அவன் பாட்டி யோசித்தார். அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

லட்டு வைத்திருக்கும் அலமாரியில் ஒரு சீட்டில் "கண்ணன் நல்ல பையன். அவன் இனி மேல் அலமாரியில் இருக்கும் லட்டைச் சாப்பிட மாட்டான்" என்று எழுதி வைத்தார். வழக்கம்போல லட்டு எடுக்க வந்த கண்ணன் அந்தச் சீட்டைப் பார்த்தான். ஆனால் லட்டை எடுத்துச் சாப்பிட்டான். அவனைக் கவனித்துக் கொண்டே இருந்த பாட்டி அவனிடம் வந்தார். "கண்ணா நீ நல்ல பையன் இல்லையா? ஏன் லட்டை எடுத்தாய்?" என்று கேட்டார்.

அதற்குக் கண்ணன் "பாட்டி நான் நல்ல பையன். அந்தச் சீட்டில் மேல் அலமாரியில் இருக்கும் லட்டை லட்டை எடுக்க மாட்டேன் என்றுதானே எழுதி இருந்தீர்கள். எழுதி இருந்தீர்கள். நான் நீங்கள் சொன்னபடியேதான் நடந்து கொண்டேன். கீழ் அலமாரியில் இருந்த லட்டைத்தான் எடுத்தேன் என்றான். பாட்டி ஆச்சரியப்பட்டுப் போனார்.

பாட்டி எப்படிச் சீட்டு எழுதி வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவர் "இனிமேல் லட்டு சாப்பிட மாட்டான்" என்றும், "இன்றுமுதல் கண்ணன் லட்டு சாப்பிட மாட்டான்" என்றும் எழுதியிருக்க வேண்டும்.

மேல் என்னும் பொருளில் வரும்போது மட்டுமே இச்சொல் பிரித்து எழுதப்பட வேண்டும். இதைப் போல வரும் பிற சொற்களையும் பார்க்கலாம்.

அல்ல:

மறுத்துக் கூறும் பொருளில் வரும்போது மட்டும் இச்சொல் தனியாய் வரும்.

இவை என் புத்தகங்கள் அல்ல.

மறுத்தல் பொருள் அல்லாமல், நேர்மறையாகவும், பாராட்டுதல் பொருளிலும் வரும்போது இணைத்து எழுதுதல் வேண்டும்.

என் கண்ணல்ல, இங்கே வா!