தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
175
வெடிப்பொலியாகவே வரும் என்பதால் கை எனும் எழுத்து ஹை என்று ஒலிக்காது. இது தனிமத்தைப் புரிந்துகொள்ளும் முறையில் குழப்பத்தை ஏற்படுத்தும்.
ஐட்ரஜன் என்றும், ஹைட்ரஜன் என்றும் இதனை எழுதலாம்.
பிற மொழிபெயர்களை எழுதும்போதும் சரியான ஒலிபெயர்ப்பு அவசியம். George Bush என்பதை ஜார்ஜ் புஷ் என்று எழுதுவதே சரி. Armstrong அப்படியே மொழிபெயர்த்தல் சரியாகாது. ஆர்ம்ஸ்டிராங் என்று ஒலிபெயர்த்தால் போதும்.
6.5 உரைப்பகுதி அமைப்பு முறைகள்
நாம் கூற நினைக்கும் கருத்து சரியான முறையில் படிப்பவரைச் சென்றடைய உரைப்பகுதி அமைப்பு மிகவும் உதவும். கருத்துகளைச் சரியான முறையில் அமைத்துக் கூறும்போது நமது கருத்து படிப்பவருக்கு முழுமையாகச் சென்றடையும்.
6.5.1 உரைப்பகுதி உருவாகும் முறை
எழுத்துகள் இணைந்து சொல் உருவாகிறது. சொற்கள் இணைந்து தொடர் உருவாகிறது. நாம் சொல்ல நினைத்த கருத்தைச் சிறுசிறு தொடர்களால் கூறும்போது நமது கருத்து எளிமையாகப் படிப்பவர்க்குப் புரியும். தொடர்ந்து கூறும்போது அவற்றைச் சிறு சிறு உரைப்பகுதிகளாகப் பிரித்துக் கூறும்போது கருத்து எளிமையாகப் புரிவதோடு ஒழுங்குடனும்
அமையும்.
உரைப்பகுதியினை உருவாக்கும்போது ஒருமைப்பாடு, கருத்து ஒழுங்கு போன்றவை கவனிக்கப்படல் வேண்டும்.
6.5.2 உரைப்பகுதி ஒருமைப்பாடு
சரியான முறையில் உரைப்பகுதிகளைப் பிரித்து எழுதும்போது பார்க்க வேண்டிய அமைப்பு ஒருமைப்பாடு. நாம் கூறப்போவது ஒரு கருத்தாக இருந்தால் அதன் ஒவ்வொரு கருத்தையும் ஒவ்வோர் உரைப்பகுதியாகப் பிரித்தல் வேண்டும்.
பல கருத்துகளைக் கூற வேண்டுமெனில் ஒவ்வொரு கருத்தையும் ஒவ்வோர் உரைப்பகுதியில் சொல்லுதல் வேண்டும்.
6.5.3 நல்ல உரைபகுதியின் அமைப்பு
பல வரிகள் இணைந்து உரைப்பகுதி உருவாகலாம். உரைப்பகுதியின் அளவு வேறுபட்டிருந்தாலும், அதன் கருத்து சரியான முறையில் அமைதல் வேண்டும்.
நாம் எழுதும் உரைப்பகுதியில் முதல் சொல் நாம் கூறப்போகும் கருத்தின் தொடக்கமாக இருத்தல் வேண்டும். இடையில் வரும் சொற்கள் பத்தியை விளக்கும் விதமாக அமைதல் வேண்டும். இறுதித் தொடரின் சொற்கள் நம் எண்ணத்தின் இறுதிக் கருத்துகளைக் கூறுவனவாக அமைதல் வேண்டும்.