உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







1.10 'ர', 'ற' வேறுபாடு

இவ்வெழுத்துகள்

மாறுபாட்டைக் கொடுக்கும்.

எழுதப்பட்டாலும் பெரிய பொருள்

தவறாக ஒலிக்கப்பட்டாலும், எழுதப்பட்டாலும்

1.10.1 ரகர, றகரப் பயன்பாடு

• றகரமும் ரகரமும் சொல்லின் முதல் எழுத்தாய் வராது.

'ற்' எனும் மெய் எழுத்துக்குப் பின்னால் இன்னொரு மெய் எழுத்து வராது.

றகரம் தமிழின் சிறப்பெழுத்து. வேற்றுமொழிச் சொல்லினை ஒலிபெயர்த்து எழுதும்போது இவ்வெழுத்தைப் பயன்படுத்தக் கூடாது.

எடுத்துக்காட்டு;

அலமாரி, கரம், பிரின்சிபால்

எங்கு எந்த ரகரம் போடவேண்டும் என்னும் குழப்பம் வரும்போது ஒன்றை நினைவு வைத்துக் கொள்ளலாம். 'பெரியவருக்குச் சிறிய 'ர' போடு, சிறியவருக்குப் பெரிய ற போடு' விளையாட்டாக இது சொல்லப்பட்டாலும் எல்லா இடங்களிலும் எந்த றகரம் வரும் என்பதைப் பயிற்சியின் மூலமாகவே அறிய முடியும்.

1.10.2 ரகர, றகர ஒலி வேறுபாடு

இவ்வெழுத்துகள் எழுதப்படும்போது மாற்றி எழுதப்பட்டால் பெரிய பொருள் மாற்றத்தைக் கொடுக்கும். இதனைப் பின்வரும் சொற்களாலும் அவற்றின் பொருள்களாலும் அறியலாம்.

சில சொற்கள் நமக்குக் குழப்பத்தைத் தரும். அவற்றுள் ஒன்று,

கறுப்பு - கருப்பு

இவ்விரண்டில் நிறத்தைக் குறிக்கும் சொல் எது?

கருமை நிறத்தைக் குறிக்கும் இடங்களில் எல்லாம் இடையின ரகரமே வரல் வேண்டும், பின்வரும் எடுத்துக்காட்டுகள் மூலம் இவற்றை அறியலாம்,

கருப்பு, கரி, கரிசல், கரும்பு, கரிய, கார்மேகம், கருங்குரங்கு, கருநாகம், கருமுகில், கருங்கடல் ஆகிய சொற்களைக் கூறலாம்.

மேலும் கறுப்பு என்பது சினம் (கோபம்) என்ற பொருளில் வரும்.

'கறுப்பும், சிவப்பும் வெகுளிப் பொருள்' என்னும் தொல்காப்பிய நூற்பா இதற்குச் சான்றாய் வரும். கறுப்பு என்பது, வறுமை என்னும் பொருளையும் தரும்.

அடுத்து, பசியாற/ பசியார என்னும் சொற்களை எடுத்துக்கொள்ளலாம். இவற்றில் றகரமும் ரகரமும் எதிரெதிர் பொருளையே தருகின்றன.