உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

55





தெரிநிலை வினைமுற்று

செய்தான் மகன்


குறிப்பு வினைமுற்று

பெரியன் மகன்

அறுவகைப் பெயர்

பொருள்

குளிர்ந்தது நிலம்

வலியது நிலம்

இடம்

வந்தது கார்

நல்லது கார்

காலம்

குவிந்தது கை

சிறியது கை

சினை

ஒளிர்ந்தது வெண்மை

நல்லன் இவன்

குணம்

முடிந்தது உழவு

இன்சொல்லன் இவன்

தொழில்


எச்சம்

முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் வினை, எச்ச வினை எனப்படும்.

தமிழன் வந்து போனான்.

மரத்திலிருந்து உதிர்ந்த பழம்.

இந்தத் தொடர்களில் உள்ள 'வந்து' என்ற வினையும் 'உதிர்ந்த' என்ற வினையும் முற்றுப் பெறாமல் உள்ளன. எனவே இவை எச்ச வினை எனப்படும். எச்ச வினை பெயரைக் கொண்டும் முடியும்; வினையைக் கொண்டும் முடியும்.

பெயரெச்சம்

பெயரெச்சம் என்பது முற்றுப்பெறாத வினைச் சொற்கள் பெயரைக் கொண்டு முடிவுறும். பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என இருவகைப்படும்.

தெரிநிலைப் பெயரெச்சம்

செயலையும் காலத்தையும் உணர்த்திப் பெயரைச் சார்ந்து முடியும் எச்சம்.

எ.கா: ஆடிய ஆட்டம்

குறிப்புப் பெயரெச்சம்

செயலையும் காலத்தையும் உணர்த்தாமல் பண்பை மட்டும் உணர்த்தும் பெயரெச்சம்.

எ.கா: நல்ல குடும்பம்

வினையெச்சம்

வினையெச்சம் என்பது

காலங்காட்டுகின்ற, முற்றுப்பெறா வினைச்சொற்கள்

வினைமுற்றினைக் கொண்டு முடிவது ஆகும். வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம்,

குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும்.