56
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
தெரிநிலை வினையெச்சம்
—
எழுதி முடித்தார். எழுதி என்னும் முற்றுப்பெறாத எச்சம் 'முடித்தார்' என்ற வினைச்சொல்லைக் கொண்டு முடிந்துள்ளது. இது காலத்தை வெளிப்படையாக உணர்த்தியதால் தெரிநிலை வினையெச்சம் ஆகும்.
குறிப்பு வினையெச்சம் - காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல் குறிப்பாக உணர்த்தும் வினையெச்சம் குறிப்பு வினையெச்சம் ஆகும்.
எ. கா : மெல்லப் பேசினான்.
தெரிந்து கொள்வோம்
வினையெச்ச வாய்பாடுகள் 12 வகைப்படும்.
இறந்தகாலம்
செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென
நிகழ்காலம்
செய
எதிர்காலம்
செயின், செய்யிய, செய்யியர், வான், பான், பாக்கு
2.5.2.3 இடைச்சொல்
இடை என்ற சொல்லுக்கு இடம் என்றும், இடையில் (நடுவில்) என்றும் பொருள்கள் உள்ளன. தனித்து இயங்காமல் பெயருடன் அல்லது வினையுடன் சேர்ந்து வரும் சொற்கள் இடைச்சொற்கள் எனப்படும். இடைச்சொற்கள் தனித்துப் பொருள் தருவதில்லை. இவை பெயருக்கும் வினைக்கும் அடுத்த நிலையில் பயன்பாடுடைய சொற்கள் ஆகும்.
அணிகலன் செய்ய பொன்னுக்கு இடையே இருந்து உதவும் இடைக்கருவிகள் போலப் பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடைநிற்பது இடைச்சொல்
அ + ஊர் = அவ் வூர்
அ என்ற சுட்டு இடைச்சொல் சொல்லின் முதலில் வந்தது.
1.
அவன் + ஐ = அவனை
ஐ உருபாகிய இடைச்சொல் சொல்லின் இறுதியில் வந்தது.
2.போ + வ் + ஆன் = போவான்
வ் என்ற எதிர்கால இடைநிலை சொல்லின் இடையில் வந்தது.
கல்வியால் அறிவும்
பண்பும் பெறுவோம். இச்சொற்றொடரில், 'அறிவும் பண்பும்' என்பனவற்றில் உள்ள 'உம்' (அறிவு+உம், பண்பு+உம்) 'பெறுவோம்' என்பதில் உள்ள 'ஓம்' (பெறு+ஓம்) இவை யாவும் பெயர்ச் சொல்லையும் வினைச் சொல்லையும் இடமாகக் கொண்டு வருகின்றன.