உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







தீண்டாமை ஒழிக!

பெண்ணடிமை ஒழிக!

ஆணவம் அழிக!

ஒழிக என்னும் சொல்லின் இறுதியில் உணர்ச்சிக்குறி (!) கட்டாயம் வரவேண்டும். 'ஒழிக' என்னும் சொல்லின் பொருள் வைதல் பொருட்டு வந்துள்ளது.

3.5.1.4 உணர்ச்சித் தொடர்

உணர்ச்சி தோன்ற கூறும் தொடரை உணர்ச்சித் தொடர் என்பர். இவ்வுணர்ச்சித் தொடரை நால்வகையாகப் பிரிக்கலாம். அவை பின்வருமாறு,

உணர்ச்சித் தொடர்

1. மகிழ்ச்சித் தொடர்

1. மகிழ்ச்சித் தொடர் 2.துன்பத் தொடர் 3.அச்சத் தொடர் 4. பெருமிதத் தொடர்

ஒருவர் சொல்லும் சொல்

அல்லது கருத்து மற்றவரின் மனத்தில் மகிழ்ச்சியை

ஏற்படுத்துமானால் அது மகிழ்ச்சித் தொடர் எனப்படும்.

எடுத்துக்காட்டு

இரண்டு ஆண்டுகளுக்குமுன் வெளிநாடு சென்ற அண்ணன் இன்று ஊருக்கு வருகிறார். (மகிழ்ச்சி)

தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டிகளில் மாணவர்கள் கலந்துகொண்டு பதக்கங்களைக் குவித்தனர். (பள்ளிக்குப் பெருமை)

நகைக்கடன், பயிர்க்கடன் முற்றிலும் தள்ளுபடி. (உழவர்களுக்கு மகிழ்ச்சி)

2. துன்பத் தொடர்

ஒருவர் சொல்லும் சொல் அடுத்தவர் மனத்தைத் துன்பப்படுத்துமானால் அது துன்பத் தொடர் எனப்படும்.

எடுத்துக்காட்டு

விபத்தில் சிக்கிய இருவருக்குப் பலத்த காயம் (துன்பம்).

ஒடிசாவுக்குப் புயல் எச்சரிக்கை 3 நாளுக்கு 95 விரைவு இரயில் ரத்து (துன்பம்).

பயிர்கள் நீரில் மூழ்கின. விவசாயிகள் கவலை (துன்பம்).