தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
81
3. அச்சத் தொடர்
ஒருவர் சொல்லும் சொல் அல்லது செய்யும் செயல் அடுத்தவர் மனத்தை அச்சம் கொள்ளச் செய்யுமானால் அது அச்சத்தொடர் எனப்படும்.
எடுத்துக்காட்டு
ஐயோ, பாம்பு! பாம்பு! (அச்சம்).
ஜவாத் புயல் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் (அச்சம்).
மீனவர்கள்
கடலுக்குள் மீன் பிடிக்கச்செல்ல
எச்சரிக்கை (அச்சம்).
4. பெருமிதத் தொடர்
வேண்டா. வானிலை மையம்
ஒருவர் சொல்லும் சொல் அல்லது செய்யும் செயல், பார்க்கும் காட்சி, அடுத்தவர் மனத்தைப் பெருமைப்படுத்துமானால் அது பெருமிதத் தொடர் எனப்படும்.
எடுத்துக்காட்டு
> தமிழரின் சிறப்பு, தஞ்சை பெருவுடையார் கோவில்! (பெருமிதம்).
தாஜ்மகாலின் அழகுதான் என்னே! (பெருமிதம்).
என்னே! வள்ளுவர் கோட்டத்தின் அழகு! (பெருமிதம்).
கரிகாலனின் கல்லணை காலத்தின் வரலாறு! (பெருமிதம்).
3.5.2 அமைப்புவகைத் தொடர்
அமைப்புவகைத் தொடரை மூவகையாகப் பிரிக்கலாம். அவை பின்வருமாறு,
அமைப்புவகைத் தொடர்
1. தனிநிலைத் தொடர்
2.தொடர்நிலைத் தொடர் (91) கூட்டுத் தொடர்
3. கலவைத் தொடர்
3.5.2.1 தனிநிலைத் தொடர்
ஓர் எழுவாயோ ஒன்றுக்கும் மேற்பட்ட எழுவாயோ வந்து ஒரே பயனிலையைக் கொண்டு முடிவது தனிநிலைத் தொடர் எனப்படும். பயனிலை என்பது முடிக்கும் சொல். எழுவாய், செயப்படுபொருள் இல்லாமலும் தொடர் அமையும்.
எடுத்துக்காட்டு
செழியன் ஓவியம் வரைந்தான்