பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுப்பு நூல்கள் 111 11. சீதை திருமணம்". செல்வி மீனாட்சி திருமணத்திற்கு மீனாட்சி (மதுரை) திருமணம் வெளிவந்தது போல செல்வி சீதை திருமணத்திற்குச் சீதாப் பிராட்டியின் திருமணம் வெளிவருகின்றது. சீதையின் தந்தை ப.வ.ராம. குழந்தையன் செட்டியாரைக் குழந்தப் பேறு பெறாத தமிழ்க் கடல் இராய.சொ. தம் குழந்தையாகப் - பெரிய குழந்தை யாக - பாவிக்கின்றார்; சீதையைத் தம் பெயர்த்தியாகக் கருதுகின்றார். இங்கு வெளிவரும் நூலும் நூலாசிரியருடன் மிக நெருங்கிய உறவுடையதாக அமைகின்றது. கவிச்சக்கரவர்த்தி கம்பன் தன் இராம காதையில் சீதை திருமணங் குறித்த 208 பாடல்களின் தொகுப்பு. மிதிலை நகரம் சக்கரவர்த்தித் திருமகளை வரவேற்றது முதல் ஞானத்தின் திருவுருவாகிய சனக மகாராசன் சீதாப்பிராட்டியைச் சக்கரவர்த்தித் திருமகனுக்குத் திருமணம் முடித்தது ஈறாக இந்நூல் அமைகின்றது. மானிட வாழ்க்கையில் திருமணம் இன்ப வாழ்க்கையில் தள்ளுவது போல சொற்சுவை பொருட் சுவை நிறைந்த பாடல்களாலான இந்நூல் இலக்கியச் சுவையை அநுபவிப்பதற்கு மனமக்களுக்கு ஒரு கையேடாக உதவுகின்றது. திருமணத்திற்கு வருகை புரிந்து மணமக்களை வாழ்த்திய விருந்தினர் கையிலும் இந்நூல் தவழ்வதால் அவர்களும் திவ்வியத் தம்பதிகளின் திருமணத்தை நவிலும் கம்பர் பெருமான் பாடல்களை நுகர்ந்து மகிழலாம். இந்தப் பாடல்கள் யாவும் கம்பன் பக்தர்களின் நாவில் காலந்தோறும் வாழ்ந்து அவர்களை மகிழ்வித்துக் கொண்டிருப்பவை. இந்துமதாபிமான சங்கத்து நூலகத்திலும் தனிப் பெருமையுடன் இடம் பெற்றிருப்பவை. 12. மலர் வணக்கத் தமிழ்மாலை". இந்நூல் விநாயகர், முருகன், சிவபெருமான், அம்பிகை, திருமால், தாயார் 13. இராயவரம் ப.வ.ராம, குழந்தையன் செட்டியார் அருமை மகள் செல்வி சீதை திருமண வெளியீடு (6-6-1971). 14. காரைக்குடி சா.நா.அ.சொ. அண்ணாமலை செட்டியார் மகன் இராமசாமி திருமண வெளியீடு (11-6-1973).