பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 தமிழ்க்கடல் ராயசொ இலக்குமி, சேக்கிழார் ஆகிய மூர்த்திகளை மலரிட்டுத் தமிழில் போற்றுதற்கு நூற்றெட்டுப் போற்றிகள் கொண்ட ஏழு வணக்கங்களின் தொகுப்பு. தமிழ்க் கடவுளர்களை அருச்சிக்க, போற்றி செய்து தரும்படி தமிழ்நாடு தெய்விகப் பேரவையின் தலைவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் பணித்ததற்கேற்ப, தமிழ்க் கடல் அவற்றைச் செய்து கொடுத்தார்கள். தெய்விகப் பேரவையின் சார்பாக அவை, தனித்தனியாக வெளி வந்தன. அவ்வாறு வெளிவந்த போற்றிகள் விநாயக வணக்கம், முருக வணக்கம், சிவ வணக்கம், அம்பிகை வணக்கம், திருமால் வணக்கம், தாயார் (இலக்குமி) வணக்கம், சேக்கிழார் வணக்கம் என்பவையாகும். இவை ஒன்று சேர்ந்து திருமண வெளியீடாக வெளியிடப்பெறுகின்றது. இவ்வணக்கங்களில் தேவார, திருவாசக, திவ்வியப் பிரபந்தத்திலுள்ள அடிகளும் கருத்துகளும், பிற்காலச் சான்றோர்கள் அருளிய மொழி களும், நிறையப் பயின்று வருமாறு ஆளப்பெற்றுள்ளன. அந்தந்தக் கடவுளர்க்குரிய சிறப்பியல்புகள் அங்கங்கு மொழியப் பெற்றுள்ளன. ஒவ்வொன்றிலும் 108 போற்றிகள் அமைந்துள்ளன. இந்நூல் வெளியீட்டால் நம் தமிழ்க்கடலின் தெய்வப் பணி முத்தாய்ப்பாக அமைந்து அவருக்குப் பெரும் புகழ் ஈட்டித் தந்து விடுகின்றது. அதனை நாமும் இன்று நினைந்து போற்றுகின்றோம். 13. திருவாசகத் தேன்". தமிழ்க்கடல் தொகுத்துக் குறிப்புரை எழுதி வெளியிட்ட இந்த நூலுக்குத் திருவாசகத் தேன்' என்று பெயர் சூட்டியுள்ளார்கள். இத்தலைப்பு, 15. காரைக்குடி உமு.க.ப.லெ.மெ. மெய்யப்ப செட்டியார். மெ. அழகம்மை ஆச்சி இவர்கள் மணிவிழா (சாந்தி) நினைவாக வெளியிடப்பெற்று அன்பளிப்பாக வழங்கப் பெற்றது. (9-5-1974).