பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

114 மொழி கன்னடம். இப்போது பெங்களுர் தலைநகரா யிருப்பினும், அப்போது மைசூரே தலைநகராயிருந்தது. மைசூர் என்னும் பெயர் வடமொழிப் பெயராகும். பண்டு மைசூர் எருமையூர் என்றும், மைசூர்ப் பகுதி எருமை நாடு என்றும் வழங்கப்பட்டது. பின்னர் இது வடமொழியாக்கப்பட்டது. வடமொழியில் மகிஷம் என்றால் எருமை என்று பொருளாம். எனவே, எருமை யூர் என்னும் தமிழ்ப்பெயர் மகிஷாசூர் என மாற்றப் பட்டதாம். பின்னர் மக்களின் வழக்கில் மசிஷாசூர் என்பது மருவி மைசூர் என்றாயிற்று. பல இடங்களில் தமிழ்ப்பெயர் வடமொழிப் பெயராக்கப்பட்ட உண்மை பலகும் அறிந்ததே. பழமலை விருத்தாசலம் எனவும், அண்ணாமலை அருணாசலம் எனவும், மன்றம் சிதம் பரம் எனவும், மயிலாடுதுறை மாயூரம் எனவும், திருக் குடமூக்கு (குடந்தை) கும்பகோணம் எனவும் மாற்றப் பட்டதும், மற்றும் பல ஊர்ப் பெயர்களும் மக்கள் பெயர்களும் வடமொழியாயிருப்பதும் ஈண்டு ஒப்பு நோக்குதற்கு உரியன. கருங்ாடகம் பண்டைய தமிழ்நாடு முதலில் மைசூர் அரசு என்ற பெயர் பெற்றிருந்ததும் மைசூரை அப்போது தலைநகராகக் கொண்டிருந்ததும் ஆசிய கருநாடக நாடு இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தமிழ் நாடாகவே இருந்ததாகத் தோன்றுகிறது. மகிஷாசூர் என்பதே மைசூர் எனத் திரிந்ததாகவும், எருமையூர் என்னும் தமிழ்ப்பெயரே பின்னர் மகிஷாசூர் என மாற்றப்பட்டதாகவும் முன்பு கண்டோம். இதற்குச் சான்று வேண்டுமல்லவா? மிகப் பழைய வரலாற்றுக்குச் சான்றாக இருப்பவை இலக்கியங்களே. அகநானுாற்றில் எருமையூரன்' என்