பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

19. கருநாடக நாடு மைசூர் அரசு, 1956 ந்வம்பரில் மொழி வாரி மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு, சென்னை மாநிலம் பம்பாய். மாநிலம் முதலிய மாநிலங்களைச் சேர்ந்திருந்த கன்னடம் பேசும் பகுதிகளையும் குடகு நாட்டையும் இணைத்துக் கொண்டு கருநாடகம்' என்னும் பெயர் பெற்றது. கருநாடகம் என்னும் சொல் வடமொழித் திரிவு என்பர் சிலர். ஆனால் பிஷப் கால்டுவெல், டாக்டர் குண்டர்ட் ஆகியோர் இதுதமிழ்ச்சொல் என்கின்றனர். கருநிற மண்ணுடைய நாடு என்பது இவர்கள் கூறும். பொருளாகும். கிழக்குத் தொடர்ச்சி மலைக்கு மேற்கே யுள்ள சமவெளிநிலம் ஆகும் இது. இந்நாட்டை, ஆந்திரர், கதம்பர், சேரர், பல்லவர், கங்கர், காளுக்கியர், இராட்டிரகூடர், சோழர், ஒய்சளர், விசய நகர மன்னர்கள், ஒளரங்கசீபு முதலிய இசுலாமிய மன்னர்கள் முதலியோர் ஒருவர் பின் ஒருவராக ஆண்ட பின்னர், இறுதியில் ஆங்கிலேயர் கைப்பற்றினர். 1947ஆம் ஆண்டு கருநாடகம் உட்பட இந்தியா உரிமை பெற்றது. இந்தப் பகுதி இந்தியநாடு உரிமை பெற்றபோது மைசூர் அரசு என்றே அழைக்கப்பெற்றது. மக்களின்