பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117

117 தானே இருந்திருக்கவேண்டும். எருமை மாடுகள் மிகுதியாயிருந்திருக்கலாம். அதனால் இப் பெயர் பெற்றிருக்கலாம். சங்க இலக்கியமாகிய புற நானுாற்றில் எருமை வெளியனார் என்னும் புலவரின் பாடல் உள்ளது. அவர் எருமை வெளி என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. எருமையூர் என்பது தாழ்ந்த பெயர் அன்று; அது மிகவும் உயர்ந்த பெயராகும். எருமைகள் நிறைந்த ஊர் மிக்க செல்வச் செழிப்புள்ன ஊராக இருந்திருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒர் எருமைமாடும் ஒரு முருங்கை மரமும் இருந்தால் அந்தக் குடும்பம் வளமாக இருக்கும்-என்று உலகியலில் கூறுவதுண்டு. அந்தக் காலத்தில் மாடு பெரிய செல்வமாகக் கருதப்பட்டது. மிகுந்த மாடுகள் உடையவர்கள் மிக்க பெருஞ் செல்வர்களாக மதிக்கப்பட்டனர். இந்த அடிப் படையில் மாடு என்னும் சொல்லுக்குச் செல்வம் என்ற பொருளும் ஏற்பட்டது. இங்கே, திருக்குறளில் உள்ள "கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு - மாடு அல்ல மற்றை யவை” (400) என்னும் குறட்பாவில் உள்ள மாடு என்னும் சொல் லுக்குச் செல்வம் என்பது பொருள். “எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார் எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்’ என்னும் திருநாவுக்கரசரின் திருவானைக்காத் தேவாரப் பாடல் பகுதியும் ஒப்பு நோக்கத் தக்கது. கன்னட மொழியில் தன என்னும் சொல் செல்வத் தைக் குறிக்கிறது. இம்மொழியில் மெய்யீற்றுச் த-8