பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

118 சொற்களே கிடையாது. எனவே, 'தனம்’ என்பது தன என்றே வழங்கப்படுகிறது. இச்சொல்லுக்கு மாடு என்ற பொருளும் உண்டு. இலத்தீன் மொழியில் Peculia என் னும் சொல்லுக்குச் செல்வம், மாடு என்னும் இரு பொருளும் உண்டு. அந்தக் காலத்தில் மாடு செல்வ மாகக் கருதப்பட்டதால், பண்ட மாற்றுக்குப் பயன் பட்டது. எனவே, எருமை மாடு நிறைந்திருந்த எருமையூர் என்னும் மைசூர் அந்தக் காலத்திலேயே பெரிய செல்வ நாடாகத் திகழ்ந்திருக்க வேண்டும். எருமையூர், எருமை நாடு என்னும் வழக்காறுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்குங்கால், பண்டைக் காலத்தில் மைசூர்ப் பகுதி (கரு நாடகம்) தமிழ் நாடாக இருந்திருக்க வேண்டும். இதனால் மைசூர்ப் பகுதி, இப்போதைய தமிழ் நாட்டினும் தாழ்ந்தது-தமிழ் நாட்டிற்குக் கட்டுப் பட்டது என்று பொருள் இல்லை. தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கருநாடகம், குடகு, துளுவம் ஆகிய இடங் களில் ஏதோ ஒரு மொழியே சிறுசிறு மாறுதல்களுடன் பேசப்பட்டது. நாளடைவில் பல்வேறு சூழ்நிலை மாற்றங்கள் ஏற்பட்டதனால், தமிழ்நாட்டில் வழங்கிய பேச்சு தமிழ் என்றும், ஆந்திராவில் வழங்கிய பேச்சு தெலுங்கு என்றும், கேரளாவில் வழங்கிய பேச்சு மலையாளம் என்றும், கருநாடகத்தில் வழங்கிய பேச்சு கன்னடம் என்றும், குடகு நாட்டில் வழங்கிய பேச்சு குடகு என்றும், துளுவ நாட்டில் வழங்கிய பேச்சு துளுவம் என்றும் பெயர் பெற்றன, ஏதோ ஒரு மூல மொழியின் திரிபுகளே இத்தனை மொழிகளுமாகும், இவை திராவிட மொழிகள் எனப்படுகின்றன,