பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

20. நீர் வேட்டல் காவிரி நீர் தொடர்பாக நாம் கூறுவது:--இரண் டாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே காவிரி பொய்க் காமல் நீர் வழங்கி வருகிறது; காவிரி தமிழ்நாட்டாரின் தாய்; சோழர்களின் குல ஆறு, தெய்வப் புனலாக மதிக் கப்படுகிறது; தன் வளவிய நீரால் தமிழ்நாட்டை வள நாடாக்கியது; மிக்க ஆழத்துடனும் பெரிய பரப்புடனும் தமிழகத்தில் திகழ்ந்தது; பொன்னி என்னும் செல்லப் பெயர் உடையது. வடக்கில் கங்கையைப் போலத் தெற்கில் தென்கங்கை எனப்படுவது. தமிழ்ப் பாவை’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றது; சோழர்களால் கொண்டு வரப்பட்டது-கரை கட்டப்பட்டது.அணை கட்டப்பட்டது-என்றெல்லாம் இரண்டாயிரம் ஆண்டு களாகத் தமிழ் நூல்களில் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலைமை காவிரிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே என்றென்றைக்கும் நீடித்திருக்க வேண்டும். இப்போது காவிரியைப் பொய்க்கச் செய்யலாகாது. வழக்கம்போல் வளம் தரச் செய்ய வேண்டும். இதற்கு, உடன் பிறப் பாகிய கருநாடகக் கன்னட நாடு, பரந்த மனப்பான்மை யுடன் செயல்பட வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் உரிமை கேட்கத் தமிழர்க்கு உரிமை உண்டு. பங்கு என்ற பெயரில் தராவிடினும், மக்கட் பிணைப்பு, (மனிதாபி மானம்) வரையாத வள்ளன்மை, உயிர் காக்கும் பேருதவி-இன்ன பெயர்களாலாவது தமிழ்நாட்டைக், காக்க வேண்டும் எனக் கருநாடகம் வேண்டப் பெறு கிறது.