பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

25 குடகு நாட்டிலிருந்து மைசூர் நாடு, கொங்குநாடு சோழநாடு ஆகியவற்றின் வழியாக ஓடிவந்து சோழ நாட்டில் வங்கக் கடலில் கலக்கும் காவிரியாற்று ஓட்டத் தின் தொலைவு அதாவது, குடகுச் சையமலையி லிருந்து காவிரிப் பூம்பட்டினம் அடையும் வரை உள்ள தொலைவு-768 கி.மீ. ஆகும். - தமிழ்நாட்டில் ஓமலூர், திருச் செங்கோடு மாவட்டங்களில் வடக்குத் தெற்காக ஒடும் ஆறு, பின்னர்ச் சோழ நாட்டில் தென் கிழக்காக ஒடுகிறது என்பதை அக நானூற்றில் உள்ள 'சிறைபறைந் துரைஇச் செங்குணக்கு ஒழுகும் அந்தண் காவிரி போல’ 76-11,12 என்னும் பாடல் பகுதி அறிவிக்கிறது. நாம் இப்போது இதை நேரிலும் காண்கிறோம். முன்னோரிடத்தில் காவிரி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஒடுவதால்தான் இங்கே செங்குணக்காக ஒடுகிறது என்று சொல்ல வேண்டியது நேரிட்டது. செங்குணக்கு அநேர் கிழக்கு. பதிற்றுப் பத்து என்னும் நூலிலும், "செங்குணக்கு ஒழுகும் கலுழி மலிர்நிரைக் காவிரி யன்றியும்...” 50-5. என இது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நில நூல் சார்ந்த வரலாறு நம்பத்தக்க உண்மை வரலாற்ாகும். இன்னும், இரண்டாயிரம் ஆண்டிற்குமேல் முற்பட்ட காவிரியின் வரலாற்றைப் பழைய இலக்கியங்களின் துணைகொண்டு ஆராய்ந்து காணலாம். காவிரி பற்றி இடைக்கால நூல்களும் பிற் கால நூல்களும் த்ரும் குறிப்புகளையும் துணைக்குச் சேர்த்துக் கொள்ளலாம். இனி அந்தப் பயணத்தைத் தொடங்குவோமாக! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/27&oldid=1018905" இலிருந்து மீள்விக்கப்பட்டது