பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

27 பாரதிதாசனார் காவிரிதல் என்னும் அடிப்படை யில் ஒரு பாடல் அளித்துள்ளார்: - “பூவிரிந்து வானெங்கும் தேன் விரிந்து பொன்விளைந் தாற்போலும் நறும்பொடி விரிந்த காவிரிதல் போலெங்கும் விரிதலாலே - காவிரியாறு என்றார்கள் ’ என்பது பாடல். விரிதல் என்பதை அடிப்படையாக வைத்து இப்பாடலில் பெயர்க் காரணம் கூறப் பட்டுள்ளமை காணலாம். பொன்னி காவிரி யாற்றின் பெயரைக் கவேரன் மகள் காவேரி என வடமொழிப் படுத்துகிறார்களே என்று சிலர் சோர்ந்து போகின்றனர். அந்தச் சோர்வுக்கு ஒரு மாற்று மருந்து உண்டு. அதுதான் பொன்னி. காவிரிக்குப் 'பொன்னி' என்னும் பெயர் ஒன்றுள்ளது. காவிரி தன் நீர் வளத்தால் நாட்டில் பொன் கொழிக்கச்செய்கிறதுஅதாவது-செல்வம் பெருக்குகிறது-என்ற மாதிரியில் பட்டினப் பாலையில் ஒரு பெயர்க்காரணம் குறிப்பாகக் கூறப்பட்டுள்ளது. - புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவறா வியன் கழனி (7, 8) என்பது பட்டினப் பாலைப் பாடல் பகுதி. மற்றும், காவிரி மழைக் காலத்தில் வண்டலுடன் குழம்பாகச் செல்லும். அந்நீரில் பொன் துகள் போன்ற பொடி மின்னும். இதை யான் நேரில் நான்காண்டுகள் கண்டுள் ளேன். திருவையாற்றில் காவிரிக்கரையில் உள்ள அரசர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/29&oldid=1018907" இலிருந்து மீள்விக்கப்பட்டது