பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

7. காவிரியின் ஆழமும் பரப்பும் . இப்பொழுது காவிரியில் தண்ணிர் சிறிதளவே விடப் பட்டு ஒடுகிறது. பண்டு ஆழம் காணமுடியாத அளவில் மிகவும் பெருகிப் பரந்து ஓடியது. இதுபற்றிய இலக் கியச் சான்றுகள் சில வருமாறு: அகநானூறு என்னும் நூலிலிருந்து: "பிண்ட நெல்லின் உறந்தை யாங்கண் கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தம்”-6-6,7. மிக்க நெல் விளையும் உறையூர்ப் பகுதியில், மூங்கில் கோல் நிலைபெற முடியாத அளவு காவிரி ஆழமுடைய வெள்ளமாக இருந்தது-கருத்து. இப்போது காவிரியின் குறுக்கே பல இடங்களில் பாலம் கட்டியுள்ளனர். அந்தக் காலத்தில் இந்த வசதியில்லை. ஒடத்தின் துணை கொண்டு ஆற்றைக் கடக்க வேண்டும். இப்போதும் பாலம் இல்லாத சில பகுதிகளில் ஒடங்கொண்டு கடக் கின்றனர். ஒடம் பரிசல்’ என்றும் சொல்லப்படும். ஒடக்காரன் நீண்ட மூங்கில் கோலை ஆற்றின் அடி மண்ணில் ஊன்றி ஊன்றி ஓடத்தை அப்பால் நகர்த்திக் கொண்டு போவான். மூங்கில் கோல் ஆற்றின் அடி மண்ணை எட்டித் தொட முடியாத அளவுக்கு ஆற்றில் மிகுந்த ஆழம் இருப்பதுண்டாம். அதுதான் கழைநிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/43&oldid=1018929" இலிருந்து மீள்விக்கப்பட்டது