பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

10. தெய்வக் காவிரி காவிரி தெய்வத் தன்மை உடையதாக-அதாவதுபுண்ணியத் தீர்த்தமாய்ப் போற்றப்படுகிறது. இதனைப் பல இலக்கியங்கள் எடுத்தியம்பியுள்ளன. சில காண் பாம் : "தண்ணறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப் புண்ணிய நன்னீர் பொற்குடத் தேந்தி மண்ணகம் மருள வானகம் வியப்ப விண்ணவர் தலைவனை வளிழுநீ ராட்டி -சிலப்பதிகாரம்-5; 165-168. காவிரியின் தெய்வத் தன்மையுடைய - புண்ணியநீரைப் பொன் குடத்தில் முகந்து ஏந்தி வந்து தேவ இந்திரன் சிலையை முழுக்காட்டினார்களாம். - "தெய்வக் காவிரித் தீது தீர் சிறப்பும்’ சிவம்பு-10-கட்டுரை-8 தெய்வக் காவிரியாம்; அது குளித்தோரின் தீவினை யைத் தீர்க்குமாம்-கருத்து; - - 'தீது நீங்கக் கடலாடியும் மாசு போகப் புனல் படிந்தும்”-பட்டினப் பாலை 99, 100

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/61&oldid=1018967" இலிருந்து மீள்விக்கப்பட்டது