பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

... 7 + 4. மற்றும், 1,10,000 ஏகருக்குத் தேவையான 4.500 கோடி கனஅடி கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கங் களை மைசூர் அரசு அமைத்துக் கொள்ளலாம். - 5. ஆனால், தமிழ் நாட்டிற்குப் போதுமான 'தண்ணீர் விடப்படும் என்னும் உறுதியின் அடிப்படையில் தான் மைசூர் அரசு நீர்த்தேக்கங்களை அமைக்கலாம். 6. தமிழ் நாட்டிற்கு உரிய தண்ணீர் அளவைக் குறைக்காத அளவில்தான், மைசூர் அரசு எதிர்காலத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். மேற்கூறியுள்ள கருத்தமைந்த குறிப்புகள் 1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் உள்ளன. எனவேதான், 1974ஆம் ஆண்டோடு ஒப்பந்தம் செல்லுபடியாகாமல் முடிந்து விடவில்லை என்னும் ஒரு கருத்து தெரிவிக்கப்படுகிறது. மற்றும், இரண்டு அரசுத் தரப்பினரும் சிலமுறை கூடிப் பேசியும் உடன்பாடு எட்டவில்லை என்றும், இது உச்சிநீதிமன்றம் வரையும் சென்றுள்ளது என்றும், மீண்டும் நடுவர்கள் கூடிப்பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்கப்படுகிறது என்றும் சொல்லப் படுகிறது. இதற்கிடையில், தமிழ்நாட்டார் புதிதாக மிகுந்த நீர் கேட்கவில்லை; இத்தனை காலமாக விட்டு வந்த நீரைக் குறைக்க வேண்டா என்றே கேட்கிறோம். என்பதான ஒரு கருத்து தமிழ் நாட்டினரால் அறிவிக்கப் படுகிறது. தமிழ் நாட்டாரே மிகுந்த நீரைப் பயன் படுத்துகிறார்கள் - எங்கள் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம் - முன்போல் தமிழகத்திற்குத் தண்ணிர் தரமுடியாது- என்பதாகக் கருநாடகத்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/9&oldid=1018882" இலிருந்து மீள்விக்கப்பட்டது