பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

97 சீரங்கப்பட்டணம்: காவிரி தன் போக்கில் கெளதம ஆசிரமம் என்னும் இடத்தை நெருங்கியதும் இரண் டாகப் பிரிந்து 13 கி.மீ. தொலைவு ஓடியதும் மறு படியும் ஒன்றாக இணைகிறது. இந்த இடைப்பட்ட பகுதியில சீரங்கப் பட்டணம் என்னும் புகழ் வாய்ந்த ஊர் உள்ளது. அரங்கம் என்றால் ஆற்றிடைக்குறை. காவிரியின் இடையில் அமைந்துள்ள மூன்று அரங்கங் களுள் இது முதல் அரங்கம் ஆதலின் இதற்கு ஆதி அரங்கம்’ என்னும் பெயர் உண்டு. இங்கே கங்கா தரேசுவரம் என்னும் சிவன் கோயிலும், பள்ளி கொண்ட ரங்கர் கோயிலும் நரசிம்மர் கோயிலும் உள்ளன; திப்புசுல்தானின் கோட்டை உள்ளது; அவனுடைய தாய்-தந்தையர் அடக்கமும் (சமாதியும்) இருக்கிறது; இது கும்பாஸ் சமாதி எனப் பெயர் வழங்கப்படுகிறது. திப்புசுல்தான் போர் புரிந்த இடமும், அவனது அடக்கம் உள்ள இடமும் இவையாக இருக்கலாம் என எனக்கு இரண்டு இ ட ங் க ள் சிலரால் காட்டப்பட்டன. அவனுக்கும் அவன் தந்தை ஐதர்அலிக்கும் இது தலை நகராயிருந்தது. சுஞ்சன் கட்டே : இந்த இடத்தில் காவிரி 80அடி உயரத்திலிருந்து ஒரு நீர் வீழ்ச்சியாக விழுகிறது. இது தனுஷ்கோடி என்று பெயர் வழங்கப்படுகிறது. கரை யில் இராமர் கோயில் உள்ளது. தழைக்காடு : இதன் பெயரைக்கொண்டே இதன் அமைப்பைப் புரிந்து கொள்ளலாம். இங்கே நாராயண சாமி கோயில் உள்ளது. இந்த ஊரில் மணல்மேடுகள் நிரம்ப உண்டு. ஒருவர் இட்ட கெடு மொழியால் (சாபத் தால்) இந்த ஊர் மண்மேடிடப்பட்டதாகச் சொல்லப் படுகிறது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/99&oldid=1019030" இலிருந்து மீள்விக்கப்பட்டது