பக்கம்:தமிழ்க் காதல்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

107



Iv

மரபு நெறி

களவுக்கும் கற்புக்கும் உரிய தொடர்பு என்ன? இது மிகவும் ஆராய வேண்டுவது. கற்பாவது நல்வாழ்வு என்றும், களவாவது அவ்வாழ்வை எய்துவிக்கும் ஒரு நன்னெறியே என்றும் கொள்க: மாமயி லன்னார் மறையிற் புணர்மைந்தர் காமம் களவிட்டுக் கைகொள் கற்புற்றென (Liff. 11) இவ்வாறு இரண்டன் தொடர்பை ஆசிரியர் நல்லந்துவனார் எடுத்துக் காட்டுவர். களவு கொண்டுவிடுதற்குரியது; கற்பு கைக்கொள்ளுதற் குரியது என்று களவின் நிலையாமையையும் கற்பின் நிலைமையும் உறவுபடுத்திக் கூறுவர். இதனால் கற்பு வாழ்க்கைக்குக் களவு நல்ல தோற்றுவாய் எனப்படுமன்றி, இத் தோற்றுவாயின்றிக் கற்பியல் அமையாது, சிறவாது எனப்படாது. நல்ல காதல்வாழ்க்கை களவானே முகிழ்க்கும் என்றல் பொருளன்று. 'கற்பெனப்படுவது களவின் வழித்தே' என்பது இறையனார் களவியல் (15). இக்கருத்து அகத்தமிழ் நெறியன்று. ஒவ்வொரு கற்பியலுக்கு முன்னும் களவியல் நிகழ்ந்தாதல் வேண்டும் எனவும், திருமணங் கூட்டும் ஒரே நெறி களவுதான் எனவும் கூறுவார் கூற்று அல்தமிழ் என அகற்றுக. இறையனார் யாத்த இவ்விலக்கணம் அகவிலக்கியத்திலும் தமிழ் மன்பதையின் வாழ்க்கையிலும் காணாத கட்டுரையாகும். பெத்தரண் ரசல் எழுதுகிறார்: "மருட்கைக் காதல் வாழ்வில் ஆழ்ந்தகன்ற இன்பக்களிப்பை ஊட்டும் என்று கருதுகின்றேன். ஒருவனும் ஒருத்தியும் வேட்கை, வேட்பு, மென்மையோடு காதற் படுவரேல், அக்காதல் இனைத்தென அறியா நயமுடையது. இக் காதல் நயப் பாங்கை மனிதவினம் உணர வேண்டும். உணராமை அறியாமையாகும். களவுக்காதல் வாழ்வின் நோக்கம் ஆகா தெனினும், வாழ்வின் ஒரு கூறேயாமாயினும், களவினால் வரும் ஆரா இன்பத்தை நுகர்ந்து திளைக்கச் சமுதாய அமைப்பு கட்டாயம் இடங்கொடுக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன். இங்ங்ணம் இருவர் தம்முட் புல்லிப் பெறும் தனி இன்பத்தினும், இல்லறம் என்பது ஒருபெரும் கருத்துடையது. அஃது ஒர் ஒழுங்கியல், குழந்தைகளைப் பெற்று அளிப்பதால், திருமணம் சமுதாய வமைப்பின் ஒரு பொதுக் கூறாகவும், கணவன் மனைவி இருவரின் சொந்த நிலைக்குஅப்பாற்பட்ட சிறப்புக் கூறாகவும் விளங்குகின்றது. ஆர்வக் காதல் திருமணத்திற்கு ஒரு தூண்டுகோலாக அமையவேண்டும். அமைவது நன்று என்பதே என் கருத்தாயினும், ஒன்று சொல்லுவன். காதலார்வம் கடைசி வரை 1. கலித்தொகைச் சொற்பொழிவுகள். ப. 4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/121&oldid=1238410" இலிருந்து மீள்விக்கப்பட்டது