பக்கம்:தமிழ்க் காதல்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

தமிழ்க் காதல்


நில்லாது, மக்கட் கொடை என்னும் சமுதாயப் பணி புரியாது. இன்பத்தோடு சமுதாயக் கடனாற்றும் வரைவுக் காதல் உண்டே. அது மிக்க பிணிப்பும் அன்பும் உண்மையும் உடையது. இவ்வாறு சமுதாயத்தில் களவிற்கும் கற்பிற்கும் உரிய இட நிலைகளை ரசலார் ஆராய்ந்து வகுப்பர். இவர் கருத்தோடு தமிழ்ச் சமுதாய அமைப்பை ஒத்திடுக. நம் சமுதாயம் களவொழுக்கத்தை ஒப்பியது, ஊக்கியது: ஆயினும் களவுக்காதலே முதன்மைக் காதல் என்று தலைமையளிக்க வில்லை. திருமணத்திற்குக் களவே வாயில் என்று ஒரே வழி கட்ட வில்லை. களவு நெறியும் மரபுநெறியும் திருமண வாழ்வு என்னும் கற்பியலுக்கு இருநெறிகள் உள. களவுநெறி, மரபுநெறி என்று அவை சொல்லப்படும். “மறை வெளிப் படுதலும் தமரிற்பெறுதலும்” என்பர் தொல்காப்பியர் (1444), இவ்விரு நெறிகளும் களவே சங்க விலக்கியத்துப் பாடல் சான்றது என்பதை நாம் அறிவோம், களவொழுக்கத்தில் காதல் நெஞ்சங்கள் விம்மியெழுகின்றன, விரைந்து அலைகின்றன, இயல்புகடந்து எண்ணுவதும் சொல்லுவதும் செய்கின்றன. இவ்வெண்ணக் கிளர்ச்சிகள் பாடலுக்கு விறுவிறுப்பைக் கொடுத்தலின், களவு சான்றோர்களால் பாடுபெற்றது. அன்னோர் பாடியது கள்ளக் களவன்று, கற்புடைய காதற் களவாதலின், களவுப் பாடல் காலம் கடந்த இலக்கியமாய் இலக்கணம் பெற்றது. களவுக் காதல் பாடல் கொண்டமையால் அந்நெறி உயர்ந்தது என்றோ, பெற்றோர் கூட்டுவிக்கும் இயல்புக் காதல் பாடல் பெறாமையால், இந்நெறி தாழ்ந்தது என்றோ கொள்ளவே கொள்ளற்க, மரபுமுறை அகத்திணைக்கண் ஒரு துறையாகப் பேசப்படுத லில்லை. இலக்கியப் படுத்தற்கு வேண்டும் உணர்ச்சிக் கூறு அதற்கு இல்லை என்றுகூடக் கூறலாம். திருமணமாகிய ஓராண்டிற்குள் ஆண்குழந்தைப் பேறு கிடைத்தது என்று வைத்துக் கொள்வோம். இப்பேறு உலகிடைப் பலர்க்கு நிலைப்பின்றி எளிதிற் கிட்டப் பார்க்கிறோம். இஃதோர் உலகியல். ஆண்டுக் கணக்காக எதிர்பார்த்துப் பார்த்து நாளெல்லாம் கோயில்குளம் சுற்றித் தலஞ்சென்று தொழுது நீராடி, பெண்ணாயினும் ஒரு குழந்தைப் பேற்றுக்குத் தவங் கிடக்கும் இல்லற முதியர்களும் பலர் உளர். எண்ணியாங்குக் குழந்தைச் செல்வம் எய்திய இவர்கள் கடவுள் அருளாற் பிறந்தது என்றும், முன்னோர் தவத்தாற் பிறந்தது என்றும் கொண்டாடுகின்றனர். இக்கொண்டாட்டத்தில் உறவினரும் ஊராரும் கலந்து கொள்கின்றனர். இஃதோர் உலகியல், நாட்கடந்து உதித்த தவக்குழந்தை இலக்கியத் தொடுப்பிற்கு நயப் பொருளாகலாம். நாளிற் பிறந்த காலக் குழந்தைமேல் பாடுதற்குக் 1. Marriage and Morals, pp. 62-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/122&oldid=1238411" இலிருந்து மீள்விக்கப்பட்டது