பக்கம்:தமிழ்க் காதல்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

தமிழ்க் காதல்



இளங்கோவடிகள் மரபுநெறிப்படி காப்பியம் அமைத்தவர். அவர் பாடிய மாந்தர்கள் தமிழ்நிலத்துப் பிறந்து தமிழ்பயின்ற தமிழ் மக்கள். எனினும் களவுக் காட்சியை ஆசிரியர் சுட்டவில்லை என்பதை உன்னுக. சிலப்பதிகாரம் உண்மையாக நடந்த வரலாறு கூறுவது. கண்ணகி கோவலனார் திருமணம் மரபுப்படி நடந்திருக்கும்ேல், அதனை மாற்றிப்புனைவது எழுத்தறமன்று என ஒருவர் எதிரிடலாம். வரலாற்றுக் காப்பியமாயினும், காதற் களங்களைக் கற்பனை வண்ணப்படுத்தி இன்ப விளையாட்டுக் காட்டுவதற்குப் புலவனுக்கு இலக்கியவுரிமை உண்டு.திராக் காதலால் கண்ணகியின் திருமுகத்தை நோக்கிக் கோவலன் இன்பத்தில் புரியாக் கட்டுரைகளைப் பொழிந்து நலம் பாராட்டுகின்றான்; செங்குட்டுவன் வடநாடு சென்ற பிரிவுக்காலை, வஞ்சிநகர் அரண்மனையில் வதியும் அவன் கோப்பெருந்தேவி நானிலப் பாணியும் கேட்டுச் செவிலியர் ஆற்றவும் ஆற்றாதிருக்கின்றாள். இவ்வகைக் கருத்துக்களாலும் பல வரிகளாலும் இலக்கிய உரிமையுணர்வுடையவர் இளங்கோ என்று அறியலாம். களவு நெறியாகப் பாடும் பெற்றியும் துணிவும் அவர் இல்லாதாரிலர். பாடியிருப்பின், அதனை நாம் வரவேற்றுப் போற்றாதிருப்போமோ? முதற்காப்பியம் படைத்த இளங்கோ அடிகளின் சுவட்டினர் தேவரும் கம்பரும் என்று வழிமருங்கு சுட்டாதிருப்போமோ? இதுகாறும் ஆய்ந்த விளக்கத்தின் நோக்கம் என்ன? தமிழ்க் காப்பியங்கள் மேற்கொண்ட மரபுநெறி களவுநெறியிரண்டும் சமுதாயத்திற்கும் அகத்திணைக்கும் பொருந்திய தமிழ் நெறிகளே எனவும், களவுநெறிக் காதல் பாடினாற்றான் தமிழ் நாகரிகமாகும் எனக்கொள்வது ஒருபாற் பிழையுடைத்து எனவும் தெள்ளிதின் விளங்கும். சுந்தரரும் காரைக்காலம்மையாரும் இந்நிலத்துத் தோன்றிய நம்மவர்: வரலாற்று மாந்தர்கள். சுந்தரர் பரவையார் திருமணத்தைக் களவு நெறியாகவும் "நற்பெரும் பான்மை கூட்ட நகைபொதிந்து இலங்கு செவ்வாய் விற்புரை துதலின் வேற்கண் விளங்கிழையவரைக் கண்டார்” (பெரிய 285), அம்மையார் திருமணத்தை மரபு நெறியாகவும் “முந்தை மரபினுக்கு ஏற்கும் முறைமை மணம்” (பெரிய. 729) சேக்கிழார் தமிழ்ச் சமுதாயத்தின் முழுக்கூறும் தோன்றத் தம் காப்பியக் கலையைப் படைத்துள்ளார், இப் பிற்குறிப்பும் மேலை ஆராய்ச்சிக்குத் துணைசெய்தல் காண்க. களவுவழிக் காதலர் w களவின் வழிவந்த இல்லறத்தார் வாழ்க்கை இனிமை மிக்கது. அவ்வழிக் கணவன் பரத்தையை நாடான், பரத்தையிற் பிரிவு காரணமாக மனைவி ஊடாள் என்று களவுநெறிக்கு ஏற்றம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/132&oldid=1238429" இலிருந்து மீள்விக்கப்பட்டது