பக்கம்:தமிழ்க் காதல்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

119


அகத்திணைத் தோற்றம் - 1 19 கூறலாமா? பரத்தை நாட்டம் களவின் வழி வாராக் காதலனிடத்தே காணப்படும்; கோவலன் அதற்கு ஒரு சான்று என்று மரபுநெறிக்குத் தாழ்வு கூறலாமா? எனின், அங்ங்னமும் கூறுதற்கில்லை. களவு நெறியிலும் பரத்தை நாடிகள் பலர் காணப்படுகின்றனர். பரத்தை நாடாக் கற்புத்திண்மையைக் களவுநெறிக் காதலன்மாரும் உடையராக இல்லை. இருவகைக் காதலர்க்கும் பரத்தை யொழுக்கத்தில் வேறுபாடின்றேனும், அவ்வொழுக்கத்தை இடித்துக் காட்டும் முறையில் வேறுபாடு தோன்றுகின்றது. மலையிடை யிட்ட நாட்டரும் அல்லர்; மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர்; கண்ணிற் காண நண்ணுவழி யிருந்தும், கடவுள் நண்ணிய பாலோர் போல ஒரீஇ யொழுகும் என்னைக்குப் பரியலென் மன்யான் பண்டொரு காலே (குறுந். 203) வேற்றுநாட்டு வேற்று ஊரராகிய நம் தலைவர் களவுக் காலத்து மலை பாராது, மரச்செறிவு பாராது, சேய்மை பாராது, நம்மைப் பார்க்க ஒருநாளும் தவறாது வந்தார். அன்று நம்மாட்டு அவர்க்கு இருந்த ஆர்வம் அது. திருமணக் கற்பாகியபின் அவர் ஆர்வம் சென்ற திசை வேறு. கடவுளை அடைந்த துறவிகள் இல்லறத்தை நீத்து ஒழுகுவாரன்றே; பரத்தைக் கடவுளைப் (கலி. 93) பற்றிய என் கணவரும் அங்ங்னம் ஆகிவிட்டார். இப்போது ஒர் ஊரில் ஒரு தெருவில் நம் கண் படாதவாறு துறவை நடத்தி வருகின்றார். அதனைக் கெடுப்பது அழகன்று. அவர் ஆர்வம் காட்டிய பண்டைக் களவுக் காலத்து நானும் அன்பு காட்டினேன். இன்று அன்பு மாறிய அவர்மாட்டு நமக்கு அன்பு எங்கனே தோன்றும்? இவ்வாறு தலைவி பரத்தத் தலைவனுக்குச் சார்பாக பேசிய தோழியை மறுத்துரைக் கின்றாள்; அவனது அன்பு பொய்யது என் முந்திய களவைச் சுட்டிக் காட்டிக் கழறுகின்றாள். இத் தலைவன் இல்லத்திற் பல்லாண்டு நல்லவனாக ஒழுகிப் பின்னர் பரத்தமைக்குமாறினான் என்பது, “பண்டொரு கால்” என்ற காலச் சேய்மைக் குறிப்பால் அறியலாம். களவின் வழிவந்த வேறுசிலர் மணந்த புதுமையிலேயே மணமனை (பரத்தைவீடு) நாடினர் என்று அறிவிக்கும் பாடல்களும் உள: நல்ல சொல்வி மணந்தினி நீயேன் என்ற தெவன்கொல் அன்னாய் (ஐங். 22) தேற்றஞ் செய்துநப் புணர்ந்தினித் தாக்கனங் காவ தெவன்கொல் அன்னாய் (ஐங், 23) காதற் கிளவிகள் பல சொல்லி மணந்தான்; ஒருகாலும் தவறாகப் பிரியேன் என்றான்; சூளுறவு தந்து நம்பும்படி செய்து நம்மைப் புணர்ந்தான், இன்று என்னானான்? நாம் வணங்கும் தெய்வம் இன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/133&oldid=1238420" இலிருந்து மீள்விக்கப்பட்டது