பக்கம்:தமிழ்க் காதல்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

தமிழ்க் காதல்


120 தமிழ்க் காதல் நம்மை வருத்தும் தெ ய்வமாயிற்று எனத் தலைவி கள விற் சொல்வேறு கற்பிற் செயல் வேறு என்று ஒழுக்கப் புறத்தானை இடித்துரைக் கின்றாள். நல்ல சொல்லி மனந்தான், தேற்றஞ் செய்து புணர்ந்தான் என்று தலைவிக்கு நினைவோடுவதால், இவள் மணம் அணிமையில் நிகழ்ந்தது எனவும், மனந்த அணிமையிலேயே களவுக்காதலன் பரத்தைக் காமுகன் ஆயினான் எனவும் கொள்ளலாம். களவுக் காதலர்களும் பரத்தைய டக் காணுதலின், மரபுநெறியினும் களவுநெறிக்கு என்ன எற்றம் சொல்ல முடியும்? மெய்யாக நோக்கின், எந்நிலைக் கண்ணும் தன் தலைவியல்லாதாளை எண்ணா ஒழுக்கத்திட்பம் களவுநெறியால் உண்டாக வேண்டும். களவுநெறியாவது வாழ்நாள்க.மும் ஒருயிர் தன் காதல் செல்லுதற்குரிய மறுபாலுயிரைத் தானே தேர்ந்து கொள்ளும் இயற்கை நெறி.அந்நெறிக்குத் தானும் பரத்தைமையைத் தடுக்கும் ஆற்றல் இல்லெனின், மெல்லிய பாலுணர்ச்சியின் வன்மையையும் தீமையையும் என் சொல்வது? உட்குடைந்து புகூஉம் துண்ணிய வேம் முனைகளால் மறைகளும் மதில்களும் பிளக்கவில்லையா? களவுக் காதலுக்குத்தடுப்புத் திறம் இல்லை என்று கென்னத்து வாக்கர் ஒரு விளக்கம் செய்கின்றார்: “விழிப்புணர்ச்சி காதற் பொருளிடத்து இல்லா நயங்களை இருப்பனவாகக் கற்பிக்கின்றது. இல்லா அழகுகளை வண்ணப்படுத்திக் காண்கின்றது. இல்லா ணர்ச்சி களை ஏற்றிச் சுவைக்கின்றது. காதலிக்கப்பட்ட பொருள் எய்துதற்கு அரும்பெர்ருளாக இருக்கும்வரை, கற்பித்த ஏற்றங்களுக்கு வாழ்வு உண்டு. வியப்பின் விளைந்த பொய்ம்மைகள், மணமான பின்னர் மறைந்தொழியும்'பரத்தமை பற்றிய மருதப்பாடல்களில் வியப்பின் விளைவை அறிகின்றோம். வேம்பின் பைங்காயென் தோழி தரினே தேம்பூங் கட்டி என்றணிர்; இனியே பாரி பறம்பிற் பணிச்சுனைத் தெண்ணீர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் வெய்ய வுவர்க்கும் என்றணிர் - - - ஐய அற்றால் அன்பின் பாலே (குறுந். 196) “நல்ல வேப்பங்காயை என் தலைவி தருவாளேல், அவள் கைப்பட்ட அக்கசப்புக் காயைத் தின்று,தேனில் ஊறியவெல்லக் கட்டி போல இனிக்கின்றதே என்று நீர் சொல்லிய ஒரு காலம் உண்டு. அதுதான் களவுக்காலம். இப்போது காம வேணவா நீங்கியபின், குளிர்ச்சிக்குப் பெயர்போன பாரியின் பறம்புச்சுனை நன்னீரை அவள் தந்தாலும், சூடாய் உப்புக் கரிக்கும் என்று வாங்க மறுக்கின்றீர். தும் அன்பின் இயல்பு இருவேறு பட்டது” என்று தோழி ஒழுக்கம் புறம்போந்த 1. Physiology of Sex, p. 99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/134&oldid=1238422" இலிருந்து மீள்விக்கப்பட்டது