பக்கம்:தமிழ்க் காதல்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

123


இவை தொல்காப்பியக் கற்பியலின் முதலிரண்டு சூத்திரங்கள். கரணம், கொடுப்பக் கொள்ளுதல் இவ்விரண்டும் கற்பின் பகுதிகளென முதல் நூற்பாவால் அறிகின்றோம். கரணமொடு புணர மரபினோர் கொடுப்பர் என்பதனால், அக் கரணத்தைச் செய்வார் மரபினோரே என்றும் அறிகின்றோம். கொடுப்போர் இல்லாமலும் இருக்கலாம், வேண்டுவது கரணமே எனத் திருமண முறையில், கரணத்தின் (சடங்கின்) இன்றியமையாமையை அடுத்த நூற்பா வலியுறுத்துவது காண்க. கொடுப்போர் இல்லா இடம் எது? அது உடன் போகிய இடம் எனவும், உடன் போக்கிடத்துத் திருமணம் கொள்ளின், கொடுப்போர் இலர் என்பதற்க்ாகக் கரணத்தை விடற்க, யாரைக்கொண்டேனும் கரணம் பெற வேண்டும் எனவும் இந்நூற்பா குறிப்பிடுகின்றது. திருமணக் கற்பின் இன்றியமையாத ஒர்முறை கரணமாம் என்பது தெளிவு. "கற்பிற்குக் கரண நிகழ்ச்சி ஒருதலை யாயிற்று (தொல் 1088) என்பது இளம்பூரண நச்சினார்க்கினியங்கள். மரபினோர் கொடுப்பதிலும், கர்ணம் மேம்பட்டது என்ற குறிப்பு “கரணமொடு புணர” என்னும் ஒடு உருபினாலும் பெறப்படும் (தொல். 574) மிகத் தொல்பழங்காலத்துக் கொடைக்குரிய மரபினோர் கொடுத்தல் என்ற ஒன்றே தமிழினத்தின் மணமுறையாக இருந்தது: பின்னர் கரணம் (சடங்கு) என்ற ஒன்று உடன் சேர்ந்தது; மணமுறைகள் இரண்டாயின; முன்னர் இருந்த கொடுப்புமுறை பிற்படப் பின்னர்ச் சேர்ந்த கரணமுறை வலுப்பட்டது; அதுவே போதிய முறையென்றுகூட ஆயிற்று என்றினைய வரன்முறைகளை நாம் அறியத் தொல்காப்பியம் உதவுகின்றது. கரணம் (சடங்கு) ஏன் வந்தது? அதன் ஏற்றத்திற்குக் காரணம் என்ன? - பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப (தொல். 1090) இத்தொல்காப்பியப் பாவிற்கு வேறுபட்ட உரைகளும் கருத் துரைகளும் பல்கியுள்ளன. எண்ணுவார் தம் எண்ணத்தை இந்நூற்பாவில் காண விழைகின்றனர். எனக்கும் அவ்விழைவு உண்டு. அகத்திணையை ஆராயப் புக்க நான் இப்பாவை ஆராயாது விடுதற்கில்லை. முன்னை உரைகள் போல் தள்ளுப் படக் கூடாதே என்னும் ஒரு பேரச்சம் என் நெஞ்சையும் அறிவையும் நல்வழிப் படுத்தலின், ஒல்லும் உரைகாண முயல்வன். பொய்யும் வழுவும் பொய், வழு, கரணம் என்பதற்குப் பொருள் என்ன? கரணம் (சடங்கு) இன்றியமையாதது எனின், அதன் பயன் என்ன? ஒருவன் ஒருத்தியைக் களவிற் காதலித்துப் புணர்ந்தான், பின்பு தனக்கும் 1. தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, ப. 9,12, தொல், 1090. நச்சினார்க்கினியர் உரை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/137&oldid=1238441" இலிருந்து மீள்விக்கப்பட்டது