பக்கம்:தமிழ்க் காதல்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

தமிழ்க் காதல்


அவளுக்கும் தொடர்பு இல்லை என்று வஞ்சித்துக் கூறினான். இவன் வஞ்சனையைக் கரணம் தடுக்குங்கொல்? திருமணத்திற்கு உடன்பட்டு வந்தார்க்கன்றே சடங்கு உண்டு. உடன்பாடில்லை, தொடர்பில்லை என்று கூறியொழிந்தக்கால், கற்பு எது? கரணம் எது? ஆதலின் களவு முறையில் தோன்றும் பொய்யையும் வழுவையும் கரணம் தடுக்கும் என்றும், தடுத்தற்காகக் காணத்தை அமைத்தனர் என்றும் மொழிவார் கருத்துப் பொருளற்றது. மணமாகியபின், கைப்பிடித்த மனைவியைக் கைவிடுகிறான், காதல் மாறுகின்றான், பரத்தை நாடுகின்றான். கட்டிய கரணம் அவனை என் செய்யும்? ஆதலின் கற்புக்குப்பின் திருமணத்தின்பின் தோன்றும் பொய்யையும் வழுவையும் கரணம் தடுக்கும் என்றாலும் பொருளற்றது. காதலித் தாரை வஞ்சித்தலும், மணந்தாரைக் கைவிடுதலும் சமுதாயத்தில் காணும் நிகழ்ச்சிகளே. நிகழாதவை என்பார் எழுத்து வஞ்சகர், தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக் கரும்பல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்த் திருதுதற் குறுமகள் அணிநலம் வவ்விய அறனி லாளன் அறியேன் என்ற திறனில் வெஞ்சூள் அறிகளி கடாஅய் முறியார் பெருங்கிளை செறியப் பற்றி நீறுதலைப் பெய்த ஞான்றை - வீறுசால் அவையத் தார்ப்பினும் பெரிதே (அகம். 265) கள்ளூரில் குமரிப் பெண்ணாள் ஒருத்தியின் நலம் துய்த்த ஒருவன், அவள் யார் நான் யார் என்று உறவு பொய்த்துச் சூளும் செய்தான். ஊர்ச்சான்றோர்கள் தக்கபடி உசாவி, உறவுண்டு என்பதைத் தெளிந்தனர். காதலறம் பொய்த்த அக்கயவனை மரத்திற்பிணித்துத் தலையில் நீற்றினைக் கொட்டினர். உரார் அறியத் தண்டனை செய்தனர் அந்நாள் என்று, கடுவன் மள்ளனார் ஒருவனது கள்ளத் தனத்தையும், அவன் சமுதாயத்திற்பட்ட பாட்டையும் உவமை வாயிலாகக் குறித்திருக்கின்றார். இன்ன அறமில் நிகழ்ச்சிகள் எஞ்ஞான்றும் நடக்கக் காண்கின்றோம். இவற்றை உயிர்த்தண்டனை தடுக்குமே தவிரக் கரணச்சடங்கு தடுக்காது. - தொல்காப்பியம் கூறும் பொய்யும் வழுவும் காதலர்களிடைத் தோன்றுவன என்று நாம் இதுவரை கருதியிருக்கின்றோமே, அது பெருந்தவறு. காதலர்களுடைய பொய்யையும் வழுவையும் அகற்றக் கரணம் வகுக்கப்பட்டது என்று கருதியிருக்கிறோம், அதுவும் தவறுகாண். முற்கூறியாங்குக் களவை இல்லையென்பானையும், கற்பைக் கடந்தொழுகுவானையும் திருமணச் சடங்கு தடை செய்யாது. செய்யா, செய்யமாட்டாச் செயலைக் கரணத்தின் மேலிட்டுக் கூறுதல் பொருந்தாது. கரணமாவது களவின் வழிவந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/138&oldid=1238443" இலிருந்து மீள்விக்கப்பட்டது