பக்கம்:தமிழ்க் காதல்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

தமிழ்க் காதல்


‘என் உள்ளம் தீவழிச் செல்லாது. அவ்வளவு தூய்மையுடையது. என் நல்லுள்ளம், இவள்மேல் ஒடியமையின், இவள் கன்னிதான் (பிறருடைய மனைவியில்லை). ஐயப்படவேண்டாம் என்று, இராமன் மீண்டும் சீதையின்மேல் மனஞ் செலுத்தினான் எனக் கம்பர் தமிழ்ச் சமுதாய ஒழுங்கை உட்கொண்டு பாடுதலை ஒப்புநோக்குக. குற்றத்திற்கு இடங்கொடுத்துவிட்டுத் தண்டிக்கப் புறப்படுதல் சமுதாயத்திற்கும் அரசுக்கும் அறிவுடைமையாகாது. குற்ற வழியை அடைத்து எதிரதாக் காக்கும் அறிவுடைமையே அழகாகும். கன்னிமை கழியாக் குமரியோடு கன்னிமை அகன்ற இளமனைவிக்குத் தோற்றரவில் பண்டு எவ்வேறுபாடும் இல்லை. இவ் வேமாற்ற நிலையைப் 'பொய்’ எனத் தொல்காப்பியர் குறிப்பர். புறவேறுபாடின்மை பலர்க்கு மயக்கஞ் செய்தலின் பொய்யெனப் பட்டது. மண அடையாளம் இல்லா மனைவியை இளந் தோற்றத்தால் குமரியெனக் கொண்டு உள்ளம் போக்கிய நல்இளைஞன், அவளை நோக்கவும் களிக்கவும் உரையாடவும் செயல் காணவும் முற்படுவான். ஏமாறு தோற்றத்தால் மேற் கொள்ளும் இக்காதல் முயற்சிகளை வழு எனத் தொல்காப்பியர் குறிப்பர். சில இடங்களில் காதல் முயற்சியின் தொடக்கத்திலேயே, இவள் மணவாட்டி என்னும் உண்மை புலனாகியிருக்கும். அறியா இளைஞன் செய்தியறிந்து காதலை அடக்கிக் கொண்டிருப்பான்! புணர்ச்சி நிமித்தத்திற்கு உரிய செயல் முற்றும் வரை, ஒரோ விடங்களில் உண்மைச் செய்தி வெளிப்படாது இருந்திருத்தலும் கூடும். உண்மை உணர்த்த வந்த கூறுகளை, வேட்கை மயக்கத்தால் ஒருவன் தனக்கு நன்மை உணர்த்த வந்த கூறுகளாகத் திரிபுபடக் கொண்டிருத்தலும் கூடும். பொய்யான குமரித் தோற்றத்தைக் கண்ட ஒருவன் உள்ளத்தளவில் காதலை அடக்கிக் கொண்டபொழுது, அதனைச் சமுதாயம் உணர வாய்ப்பில்லை. அடக்கிக் கொள்ளாது, எண்ணத்தைப் பெருக்கி, இணைவிழைச்சு நச்சிக் குமரியனை யாளைக் கொள்ள முந்துறும் போது, சமுதாயம் இவனது காதல் வழு என்பதனையும், இவ்வழுவிற்கு இவள் பொய்த்தோற்றம் குமரியோடு வேறு பாடின்மை - காரணம் என்பதனையும் காரண காரியத்தோடு அறிந்து கொள்கின்றது. காதல் வழுப்பட்டானைக் குறை கூறுதற்கோ, வழுவுக்குக் களமாகிய இளமனையாளைக் குறை கூறுதற்கோ இடனில்லை. குறை சமுதாயத்தின் பாலது. கரணத் தோற்றம் எச்சமுதாயத்தின் பழக்க வழக்கங்களும் குறைவற்ற நிறையுடையன வல்ல எனினும், ஆசிரியன் போலக் குறைகளைய வேண்டும் என்ற செந்நோக்கமும், குறைபாடுகளைக் கூர்ந்து கானும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/140&oldid=1238445" இலிருந்து மீள்விக்கப்பட்டது