பக்கம்:தமிழ்க் காதல்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

127


அறிவுமுனைப்பும், வளரும் சமுதாயத்திற்கு வேண்டியவை. திருத்திக் கொள்ளும் சமுதாயத்தில் குற்றப் பெருக்கத்திற்குப் பற்றுக்கோடு இல்லை. பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தில், அதன் இயக்கத்தை உற்றுநோக்கி ஒர்ந்து ஆவன செய்யும் இனப் பெரியவர்கள் இருந்தனர். இவர்களை ஐயர்' என்பர் தொல்காப்பியர். நாடு முழுவதும் நன்கு மதித்த பெரியோரவை தமிழ் நிலத்து விளங்கிற்று என்பதற்கு வேறு கரி வேண்டா. புலவரெல்லாம் ஒப்பிய அகத்தினைப் படைப்ப்ே போதுமானது. மேற்கூறிய பொய்யும் வழுவும் தோன்றிய பிற்பாடே, சமுதாயத்தின் திருமணமுறைக் குறைபாடு இனச்சான்றோர்கட்குப் புலனாயிற்று. வழுவிற்குக் காரணம் பொய். வழுவகல வேண்டின் பொய் அகலவேண்டும். மணப்பக்குவம் எய்தியிருக்கும் பெண்ணுக்கும், பக்குவம் வந்து மணம் எய்தியபண்ணுக்கும் புறத் தோற்றத்தில் யாரும் காண அடையாளம் வேண்டும் என்று சான்றோர்கட்குப் பட்டது. வேறுபாடு காட்டும் கரணம் சடங்கு வகுத்தனர். “பொய்யும் வழுவும்” என்ற தொல்காப்பியப் பாவின் கருத்து இதுவே. பெண்ணின் கற்பு எவ்வகையானும் ஊறுபடக் கூடாது, ஊறுபட விடலாகாது என்று கண்ணும் கருத்துமாய் நாட்டஞ் செலுத்திய தமிழ்ச் சமுதாயத்தின் மனவோட்டம் பெறப்படும். மண்டினி ஞாலத்து மழைவளந் தரூஉம் பெண்டிராயின் பிறர்நெஞ்சு புகா அர் என்று மணிமேகலைச் சாத்தனார் கற்புக்குக் கடிய வரம்பு செய்வர். மனைவிக்கு மணப்பொறி இல்லையெனின் தவறாகப் பிறர் நெஞ்சு புகும்நிலை எற்படுமன்றோ? பெற்றோரின் வறுமையால் பிள்ளைகள் வாடுதல்போலச் சமுதாயக்குறை நல்லவர்களையும் குறையாக்கும். “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்” என்னும் வரலாற்று நூற்பாவிற்கும், இவ்விரண்டும் காதலர்களிடைத் தோன்றியவை என்று எல்லோரும் உரை செய்வர். அது உரையாகாமை மேலை விளக்கத்தால் அறிந்தீர் அகத்திணைக் காதலர்களிடைத் தோன்றுவன வல்ல என்று தெளிவாக நினைத்துக் கொள்ள வேண்டும். கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்ளல் என்னும் ஒரு மணநெறியால், பொய்யும் வழுவும் (உள என்று) வெளிப்படையாக அறிந்த பின்னர் அஃதாவது பொய்யும் வழுவும் இனச்சான்றோருக்கு வெளிப்பட்ட பின்னே - அவர்கள் அவற்றை யொழித்தற்குக் கரணம் என்னும் மற்றொரு நெறியை வகுத்துத் தந்தனர் என்பதன் பொருளைக் கூர்ந்து கொள்க, தோன்றல் - வெளிப்படுதல். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/141&oldid=1238447" இலிருந்து மீள்விக்கப்பட்டது