பக்கம்:தமிழ்க் காதல்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

தமிழ்க் காதல்



கரணக்குறி

திருமணதிற்குக் காண வழக்கு இன்றியமையாதது என்ற உண்மை தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே உணரப்பட்டது. எனினும், கரணக்குறி அல்லது சடங்கடையாளம் காலந்தோறும் தமிழகத்து வேறுபட்டிருக்கக் காண்கின்றோம். இஞ்ஞான்று நாடு முழுவதும் தாலி பொதுவடையாளமாக விளங்குகின்றது. சில பகுதிகளில் தாலியுடன் மிஞ்சி என்னும் கால்விால் மோதிரங்களும் மணக்குறியாக உள. இம்மோதிரங்கள் காலின் இரண்டாவது விரலில் மாட்டப்படுபவை. கழுத்திற் கட்டும் தாலி அடிமைக்குறி எனவும், கணவனுக்கு மனைவி அடிமை என்பதுவே தாலியின் கருத்து எனவும் ஒப்பாடிகள் கரணக் குறிக்கு விளக்கஞ் செய்குவர் அ டிமைக் கருத்தாயின் பெரும் பிழைதான்; தாலி அகற்றப்பட வேண்டியதுதான். தாலியாவது மணவணி மணங் காட்டி, பிறர்க்கு வேண்டா எண்ணம் தோன்றாது தடுக்கும் அறிவணி. இன்றைய கருத்துக்கோள் பொருந்தாது என்பது கரணம் தோன்றிய வரலாற்றால் தெளியலாம். பண்டைச் சமுதாயத்தில் பெண்ணினத்துக்கு உரிமையிருந்ததா? ஒத்த மதிப்பு இருந்ததா? இவ்வினாக்களுக்கு விரிவிடைகூற இஃது இடமில்லை. பெண்ணுரிமை பல்வேறு நகரங்களின் கூறுகளையும் இனங்களின் வழக்காறுகளையும் அறிகின்றோம். அறிவியல் வேகம் எல்லார்க்கும் பொதுவுணர்வை உட்டுகின்றது. இந்நிலையில் இன்று உரிமைக்கும் ஒத்தலுக்கும் உலகளவால் விரிந்த கருத்துக் கொண்டு வருகின்றோம். இக்கருத்து இன்னும் வளரவுங் கூடும். பண்டைத் தமிழ்ச் சமுதாய அளவில் நோக்கின் பெண் கற்கும் உரிமையும், கவிபாடும் உரிமையும், காதலுரிமையும், காதற் களவு செய்யும் உரிமையும், காதலனை இடித்துரைக்கும் உரிமையும், இல்லறத் தொழிலுரிமையும் பெருமையும் புகழும் எல்லாம் ஆடவர்க்கு நிகராகப் பெற்றிருந்தாள் என்பது நெற்றித் திலகம் (வெளிப்படை), சமுதாயத்தின் நாகரிகத்தை அதன் மொழிச் சொற்களில் கண்டு கொள்ளலாம். மொழி நாகரிகத்தை வஞ்சிக்காது, தலைவன் தலைவி, காதலன் காதலி, கிழவன் கிழத்தி என்னும் பால்நிகர் சொற்கள் தமிழ்ச் சமுதாய மொழியில் உள. “பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டு (12, 18) என இருபாலார்க்கும் ஒப்பினது வகைகளைத் தொல்காப்பியர் ஏற்றத் தாழ்வின்றிச் சுட்டுவர்.இவை ஒத்திருந்தாலல்லது அறிவுடையார்கட் காமக்குறிப்புத் தோன்ற மாட்டா என்று உரைவிளக்கம் செய்குவர் போராசிரியர், இன்ப நுகர்ச்சிக்கே ஏற்ப ஒப்பு வேண்டும் என்பது அவர் உரைத்துணிபு. "இரு பேராண்மை செய்த பூசல்” (குறுந் 43) என்று சங்ககால ஒளவையார் பாடுதலின், ஆண்மை பெண்ணுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/142&oldid=1238458" இலிருந்து மீள்விக்கப்பட்டது