பக்கம்:தமிழ்க் காதல்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

தமிழ்க் காதல்


என்று கூறுவதால், பின்னியநிலை குமரிக் கோலம் என்றும் மலரணிகை கற்புக்கோலம் என்றும் தெளிவாதல் காண்க. மலரணி சடங்கு செய்யும்போது, தலைவியின் கூந்தலைத் தலைவன் கை தொடும். தன் கூந்தலைத் தொட்டானுக்குக் குமரி உரிமையாகின்றாள். உற்றார்க்கு உரியர் பொற்றொடி மகளி: என்பது பழமொழி, "இவள் ஒலிமென் கூந்தல் ரியவாம் நினக்கே" (குறுந் 225) “குறுந்தொடிமகளிர் நாறிருங் கூ ந்தற்கிழவர்" (புறம், 13) என்ற அடிகளால், கூந்தலுக்கு உரியவன் யாவன் அவன் கொழுநன் என்ற மணவழக்குப் பெறப்படும். கூந்தலுக்கு உரியவன் என்றால், கூந்தலில் மலர் வேய்ந்து மணங்கொள்பவன் என்பது குறிப்பு. நல்லாவூர் கிழார் பண்டு நடந்த மணமுறைகளைத் தாம் பாடிய ஒரே ஒரு பாட்டில் தொகுத்துச் சொல்லுவர். குழந்தைகள் பெற்ற இல்லற மாதர் ஒருங்குகூடி, ‘கற்பு வழாமல் அறம்பல செய்க, கொண்டானைப் பேணி ஒழுகுக, தக்க வாழ்க்கைத் துணையாகுக! என்று திருமணக் காலத்து மணப்பெண்ணை வாழ்த்துவர் எனவும், கூந்தல்மேல் பூவும் பிறவும் விளங்க நன்மணம் நிகழ்த்துவர் எனவும் அப்பாட்டு மனச்சடங்கைச் சொல்லிச் செல்கிறது: நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க வதுவை நன்மணம் கழிந்த பின்றை (அகம். 86) திருமணந் தொட்டு மகளிர் பூவணிவர் என்பதற்கு இப் பாட்டும் குறிப்பிற் சான்றாதல் காண்க: இம் முடிபை நினைத்து களவுத் துறைப் பாடல்களைக் கற்கும்போது, எதிர்ச் சான்றுகள் போல்வன சில தோன்றக்கூடும்; குமரிக் காலத்துப் பூச்சூடும் வழக்கம் உண்டு போலும், அது சமுதாய விலக்கன்று என்று காட்டுவதுபோலச் சில செய்யுட்கள் காணப்படும். வண்டுவழிப் படரா தண்மலர் வேய்ந்து (அகம். 198) வீபெய் கூந்தல் வீசுவளி உளர (நற். 264) அணிமலர் முண்டகத் தாய்பூங் கோதை மணிமருள் ஐம்பால் வண்டுபடத் தைஇத் துணிநீர்ப் பெளவம் துணையோ டாடி. (நற். 265) குவளை நாறுங் குவளையிருங் கூந்தல் (குறுந் 300) இவ்வாறு வரும் பகுதிகளைக் கண்டு, என் முடிவுக்கு மாறான சான் றுகள் என்று கருதிவிடவேண்டா.துறைகளோடு பொருத்தி நேர்பட ஆராயின், இயற்கைப் புணர்ச்சியிலும் உடன்போக்கிலும் இன்பக் களிப்பிலும் இன்ப எதிர்பார்ப்பிலும் நீர் விளையாட்டிலும் குமரியர் பூவணிந்த குறிப்புக்களாகவே இருக்கும். *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/152&oldid=1238484" இலிருந்து மீள்விக்கப்பட்டது