பக்கம்:தமிழ்க் காதல்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

137


பொலிவுடையது, கண்ணுக்கினியது, நட்பாடத் துணையாவது, கைக்கு அழகியது,மனம் பொதிந்தது, மனத்தைக் கிளறுவது, காதலுக்கு நாகரிகத் துாதாவது; அனைய பெருஞ் சிறப்பும் வாய்ந்த ஒரு சிறு பொருள் பூ பூவனையர் பூப்பெய்திய குமரியர். கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை நாறிதழ்க் குவளையொ டிடைப்பட விரைஇ ஐதுதொடை மாண்ட கோதை போல நறிய நல்லோள் மேனி முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே. (குறுந் 32) வேங்கையும் காந்தளும் நாறி ஆம்பல் மலரினும் தான்தண் ணியளே (குறுந். 84) காதற்கன்னி முல்லையும் குவளையும் வேங்கையும் காந்தளும் ஆம்பலும் போல்பவள் எனவும், ஐம்மையும் நறுமையும் இனிமையும் தன்மையும் வாய்ந்த மென்மையள் எனவும், பூவாகவும் பூவின் தன்மையனவாகவும் போற்றப்படுகின்றாள். இல்லக் குமரியர் பூச்சூடி மணம் பரப்பிப் பிறரைக் கவரவேண்டும் என்பதில்லை: கவருதலும் கூடாது. அத்தகைய செய்புனை கவர்ச்சி கற்பு நெறிக்கு ஒவ்வாது. காதல் நெறியை வளர்க்காது என்றெல்லாம் தமிழ் மூதறிஞர்கள் கண்டனர்; குமரியர் பூவணிதலைக் கடிந்தனர் என்று கொள்ள வேண்டும். - XI பூவணியும் உரிமை குமரியர் பூவணியும் உரிமையைத் திருமணநாள் முதல் பெறுகின்றனர். இவள் இல்லறத்தி, மனைவியானாள் என்பதற்குப் பூக்கரணம் செய்யப்படும். இக்கரணத்தைத் தலைவன் செய்வான் என்று அறிகின்றோம். செந்நிற வேங்கை பூவின்மேல் இருந்த மயில் நகையணிந்த பெண் போலக் காட்சியளிக்கும் நாட்டவனே, நல்லது செய்தாய் நின் குடும்பம் வாழ்க, திருமணத்தைக் கொண்டாடும்படி பின்னிய கரிய இவள் கூந்தலில் மலர் சூட்டினாய்: - எரிமருள் வேங்கை யிருந்த தோகை இழையணி மடந்தையில் தோன்றும் நாட இனிதுசெய் தனையால் நுந்தை வாழியர் நன்மனை வதுவை அயரவிவள் . பின்னிருங் கூந்தல் மலரணிந் தோயே (ஐங். 296) என்று மணஞ்செய்து கொண்ட களவொழுக்கத் தலைவனைப் பார்த்துத் தோழி மனமார வாழ்த்துகின்றாள். கூந்தலைப் பின்னி மலரணிந்தான் என்று கூறாமல், பின்னிய கூந்தலில் மலரணிந்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/151&oldid=1238461" இலிருந்து மீள்விக்கப்பட்டது