பக்கம்:தமிழ்க் காதல்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

141



நானிலச் சாயல்

பழந்தமிழோர் இயற்கையைக் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் -மலை காடு வயல் கடல்-என நானிலங்களாகக் கண்டனர், வரையறுத்தனர் என்பதனை நாம் பலகால் கேட்டுள்ளோம். சங்க இலக்கியத்தைச் சிறிதுபற்றி எழுதுவாரும் நானிலப்பாகுபாடுகளைக் குறித்தெழுதுவது இன்று ஒரு வழக்காறாயிற்று. பல்கால் பலரால் எழுதப்படுதலின், திணையமைப்பு சுவையற்ற பழங்கருத்தாகப் படலாம்; எனினும் திணையறிவில்லாதார்க்குச் சங்க விலக்கியம் விளங்குதல் பருவம் வாயாதார் இன்பம் நுகர்வதை ஒக்கும். ஆதலின், நிலம் பற்றிய திணைப்பாகுபாடு எல்லோர்க்கும் தெரிய வேண்டும். இத் தொடக்கவறிவு சங்கநூற் கல்விக்கு நன்னர் வேண்டும். இவ்வறிவு பெறுதல் ஒருவகை. இனி, தமிழகத்தின் இத்திணைச் சூழ்நிலைகள் தமிழ்மக்களின் வாழ்க்கையையும் தமிழ் இலக்கியத் தோற்றத்தையும் எங்ங்னம் உருப்படுத்தின? ஊடுருவின? என்று காண்டல் மற்றொரு வகை. இவ்வகையினைத்தான் இவ் வாராய்ச்சி விரித்துரைக்க முற்படுகின்றது. "மானிட இனவியலின்படி ஆராயின், தமிழ்ச் சமுதாயம் தன்னைச் சூழ்ந்த இயற்கைக்கு ஏற்ற தனிக் கூறுகளைக் கொண்டு விளங்குவது. மிகத்தொல் பழங்காலத்திலேயே மனித" வாழ்க்கையின் ஐவேறு நிலைகளை அறிந்திருப்பது.இவ்வறிவு பெற்ற சமுதாயம் வேறொன்றில்லை” என்று பேராசிரியர் இராமச்சந்திர தீட்சிதர் தமிழ்இலக்கியத்தின் வரலாற்றின் ஆராய்ச்சி எனப் பெயரிய நூலில் வரைந்துள்ளனர். தமிழர் வகுத்த குறிஞ்சிமுதலாம் ஒவ்வொரு திணையும் தன்னிறைவுடையது; தன்னகத்து வாழும் மக்கட்கு வேண்டும் உணவு முதலான நுகர்ச்சிகளையும், யாழிசை முதலான கலைகளையும், தெய்வம் முதலான நெறியுணர்வையும், தொழில் முதலான வினை வாய்ப்புக்களையும் வழங்கவல்ல பெற்றியது. வாழ்க்கைக்கு வேண்டும் கூறுகளெல்லாம் கொண்டிருத்தலின், தினை ஒவ்வொன்றும் தனியுலகம் என்று சொல்லத்தக்க அமைவுடையது. ஆதலினன்றே காடுறையுலகம், மைவரையுலகம், தீம்புனல் உலகம், பெருமணல் உலகம் என்று பரந்த நிலையைக் காட்டினார் தொல்காப்பியர் 650. உலக வாழ்க்கைப் பொருள்ையெல்லாம் நிலக்கண்கொண்டு திணைமனப்பான்மையோடு நோக்கினர் பழந்தமிழோர் என்பதனை, அன்னவர் கண்ட சமயம் அறம் அரசியலெல்லாம் நமக்கு மூக்கணி போலக் காட்டுகின்றன. முல்லைத் திருமாலும் குறிஞ்சி முருகனும், மருத வேந்தனும் நெய்தல் வருணனும் (பாலைக் கொற்றவையும்) திணைத் தெய்வங்கள் ஆகும். இத் தெய்வங்கள் நிலத்திற் கேற்ற 1. Studies in Tamil Literature History, p. 178. cf. Chapter I’” the Geographical basis of the AncientCulture ofthe Tamils, in The History of the Tamils. - t

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/155&oldid=1238488" இலிருந்து மீள்விக்கப்பட்டது