பக்கம்:தமிழ்க் காதல்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

தமிழ்க் காதல்


படைப்புக்களே அவ்வந் நிலப் பொருள்கள் தோற்றிய உருவங்களே என்று அறியவேண்டும். “தமிழர்களுக்கு மலை மேல் வாழ்க்கை தொடங்கிய அக்காலத்திலேயே கடவுண்மை முகிழ்த்துவிட்டது. ஆதலின் அன்னவர்தம் வழிபாடும், தெய்வப் பிறப்பியலும் எல்லாம் வாழ்ந்த இயற்கைச் சூழ்நிலையின் வடிவாக உள. முருகன் முழுமுதற் கடவுள் ஆவான் என்று கருதினாலும், உருவத்தில் மலை கிழவோனாகவே கண்டனர். அக்காலத்து அன்னவர் வாழ்ந்த திணைநிலம் குறிஞ்சியாக இருந்ததே அதற்குக் காரணம்” என டாக்டர் தனிநாயகம் பழந்தமிழ்ப்பாட்டிற் கண்ட இயற்கை என்னும் ஆங்கில நூலில் விளக்குவர். தமிழர் சமயம் திணைத் தன்மை யுடையது என்று இதனால் அறியலாம்."தெய்வம் உணாவே மாமரம் புள்” (தொல். 636) எனத் தெய்வமும் திணைக்கருப் பொருளாக எண்ணப்பட்டு வருதலின், தமிழர் தெய்வங்கள் தமிழ்நிலத் தாய் ஈன்றவை என்று துணிதற்குச் சான்று வேறு வேண்டுமோ? நாடா கொன்றோ, காடா கொன்றோ; அவலா கொன்றோ மிசையா கொன்றோ - எவ்வழி நல்லவர் ஆடவர் - அவ்வழி நல்லை வாழிய நிலனே. (புறம் 781) என்பது ஒளவையார் தம் அறப்பாட்டு. இப்பாட்டில் நாடு என்பது மருதம், காடு என்பது முல்லை, அவல் (பள்ளம்) என்பது நெய்தல், மிசை (மேடு) என்பது குறிஞ்சி. வாழ்விடத்தின் மேன்மை அங்கு வாழ்வாரது திறத்தைப் பொறுத்தது என்று மனிதவாற்றலை உணர்த்த வந்த ஒளவையார், தமிழர் கண்ட நானில அடிப்படையில் அறங்கூறுதலை எண்ணுக. தமிழகத்தின் நாடுகளும் நகரங்களும் ஊர்களும் திணைப் பெயராலும் கருப்பெயராலும் திசைப் பெயராலும் வழங்கப்பட்டுவந்த மரபுகளை ஊரும் பேரும் என்னும் ஒரு பெருநூலில் டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை எடுத்துக் காட்டுவர். சங்க மக்கட்கு உறைந்திருந்த திணைப்பான்மை பின்னே தமிழ்மக்கட்குக் கறையலாயிற்று. சமயப் பான்மை உள்ளத்துப் பரவலாயிற்று. அதனால் ஊர்ப்பெயர்கள்.இடைக் காலத்துச் சமயச் சார்பு உடையனவாய்த் தோன்றின என்ற புதிய வரலாற்றையும் இந்நூலால் அறியலாம். நின் நாடு நானிலக் கூறுகளும் உடையது என்று திணைநிறைவு சுட்டினாற்றான், சங்கத் தமிழ்வேந்தன் மகிழ்வான்.இம்மனமையை அறிந்த புலவர்கள் அவ்வாறே பாடல் யாத்துச் சிறப்பித்தனர். “பாடல் சான்ற நெய்தல் நெடுவழி" “முல்லை சான்ற முல்லையம் புறவு”. "மருதஞ் சான்ற மருதத் தண்பனை” * , , , "குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணி 1. Nature in Ancient Tamil Poetry, pp-68-9.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/156&oldid=1238489" இலிருந்து மீள்விக்கப்பட்டது