பக்கம்:தமிழ்க் காதல்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

தமிழ்க் காதல்



காப்பியத்திற்கு ஒரிரு மேற்கோளும் அருட்பாசுரத்திற்கு ஒரு மேற்கோளும் சிறுநூற்கு ஒரு மேற்கோளுமாக மேலே கண்டோம். இடைக்காலத்து இலக்கிய வடிவெடுத்த இந்நூலினங்கள் அறிவிப்பது என்ன? இடைத் தமிழ்ச் சமுதாயத்தைச் சாதிகளும் சமயங்களும் இயக்கின; காதலும் மணமும் எல்லாம் சாதிவழி சமய வழிப்பட்டன; சங்க காலம் போல இய்ற்கைத் திணை வழிப்பட வில்லை என்பது தெளிவு. சங்க காலத்து இருந்த குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்ற நிலத்திணையமைப்பு:தமிழகத்து இடைக் காலத்தும் இருந்தது. இருந்தும், திணைவழிப்பட்ட மனப்பான்மை அக்காலத்தோர்க்கு இல்லாதொழிந்தது. திணைப்பான்மை மதப் பான்மையாக மாறிவிட்டது. பண்டைக் காலத்தார்க்குக் குலநினைவு இருந்தது. அது தொழில் அடிப்பட்ட நினைவு. ஆதலின் அகத் திணைப் படைப்பில் சாதி சமய வரவுக்கு இடமில்லை என்று அறிக. சாதி சமயங்கள் முளைத்துக் கிளைப்பதற்குப் பன்னூறாண்டுகள் முன்னரே அகத்திணையிலக்கியங்களும் இலக்கணங்களும் எழுந்தன. ஆதலான், தமிழர் கண்ட அகத்திணை சாதி சமயத்திற்குட்படாதது, உட்படுத்த முடியாதது,உயர்ந்தது, எல்லார்க்கும் உரியது. சங்க மக்கள் வாழும் இடத்தால் அல்லது செய்யும் தொழிலால் பெயர் பெற்றனர், பகுதிப்பட்டனர் (தொல்.965) நாம் இன்று காணும் . சாமிப்பிரிவினைக்கு அன்று இடமேயில்லை. மதங்கள் இருந்தன வேனும், மக்களின் நடைமுறை வாழ்க்கையில் அவற்றிற்குப் பேரிடம் இல்லை. வரலாற்றுக்கு முற்காலத்தேயே தமிழ்ச் சமுதாயம் வளர்ந்து விட்டது எனவும், அதன் மக்கட்பாகுபாடு நிலத்திற்கு ஏற்ற தொழில் அடிப்படையில் விளங்கியிருந்தது எனவும்.பேராசிரியர் தீட்சிதர் எடுத்தியம்புவர். அகத்திணைத் தலைமக்கள் வெற்பன் கானவன் துறைவன் என நிலப்பெயர் தாங்கியும், உழவன் உழத்தி வேட்டுவன் வேட்டுவிச்சி எனத் தொழிற்பெயர் தாங்கியும் வழங்கப்படுதலை இலக்கியங்களால் அறியலாம். பண்டு எல்லாத் திணைநிலமும் எல்லாத் தொழில் வினையும் ஏற்றத்தாழ்வின்றிக் கருதப்பட்டன. ஆதலின் இன்ன நிலத்தான்,இன்ன தொழிலான் எனக் கீழ்மைப்படப் பேசுவதின்று, தமிழ்ச் சமுதாய மக்களிடை நிகர் மதிப்பு நிலவியது: நிலமும் தொழிலும் பிளவுக் காரணங்களாக இல்லை. தலைவன் தலைவி புெரும்பாலும் ஒரு நிலத்தவராகவே அகத்திணைப் பாக்களில் காணப்படுவர்.” - . • * 1. The Tamilian Antiquary, No 6: p. 10 2. Studies in Tamil Literature and History, p. 180 cf. J.V. Chelliah: Pattuppattu: General Introduction 3. குறிஞ்சிக் காதலர்கள் நற். 102 முல்லைக் காதலர்கள், கலி. 101; மருதக் காதலர்கள், அகம் 156; நெய்தற் காதலர்கள் ஐங், 199

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/160&oldid=1238495" இலிருந்து மீள்விக்கப்பட்டது