பக்கம்:தமிழ்க் காதல்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

147



நிலங்கடந்து எழுந்த காதல்கள் சிலவே. மலைக்கு உப்பு விற்க வந்த உமணச் செல்வியை அம்மலை நாட்டவன் காண்கின்றான்; வளையொலிக்க நடக்கும் ஒசிந்த நடையில் மயங்குகின்றான்; நெல்லுக்கும் உப்புக்கும் நேர்விலை என்று கூறும் குயிலோசையைக் கேட்கின்றான்; நாய்க் குரைப்புக் கேட்டு வெருவும் கண்மருட்சியில் மனமிழக்கின்றான். இத் திணைக்கலப்புக் காதல் இருதிணை எல்லைப் பகுதிகளில் நிகழ்ந்திருத்தல் வேண்டும். நகர மாந்தர் களையும் பேருர் வாழிகளையும் தலைமக்களாகக் கொண்ட அகப் பாடல்களும் உள (குறுந் 31 அகம். 35). அகத்திணை தலைமக்கள் யார்க்கும் சாதி சமயக் குறிப்பு இல்லை என்று நாம் அறிவோமாக. xIV முல்லை வழக்கம் பிற திணைகளிற் காணப்படாத சில தனிப் பழக்க வழக்கங்கள் முல்லைத் திணையில் உண்டு. நல்லுருத்தினாரின் முல்லைக் கலியில் இத்தனிக் கூறுகள் புலப்படுத்தப்பட்டுள. எல்லா இஃதொன்று கூறு, குறும்பிவர் புல்லினத் தார்க்கும் குடஞ்சுட் டவர்க்குமெங் கொல்லேறு கோட்ல் குறையெனக் கோவினத்தார் பல்லேறு பெய்தார் தொழுஉ (கலி.107). முல்லைத்திணை மக்கள் ஆட்டிடையர் பசுவிடையர் கோவிடையர் என முப்பிரிவுப்படுவர்; எனினும் அப்பிரிவு மணவுறவுக்குத் தடையாக இல்லை என்பதனை மேலைக் கலிப்பாவால் அறியலாம். முல்லைக் குமரன் முல்லைக் குமரியை மணக்க வேண்டின், அவள் பெற்றோர் விடுக்கும் காளை யேற்றினைச் சாடிப் பிடித்துத் தழுவி அடக்குதல் வேண்டும். இவ் வழக்கம் ஏறுதழுவுதல் எனப்படும். இதுபற்றிய துறை முல்லைத் திணைக்கே உரியது. ஓர் இடைமகன் காதலியை மணக்குமுன் ஏறுதழுவுதல் வேண்டும்: அத்தழுவுதலில் நழுவிவிடினும் வழுவிவிடினும் காதலி தன் மனைவியாகாள். விடுத்த ஏற்றினைப் புல்லினான் யாவன், அவன் தன்மனத்துக் கொவ்வாப் பிறனாயினும், அவனுக்கு அவ்விடைமகள் மனைவியாவாளா? இத்துறை அகத்திணையில் இருக்கலாமா? ஒரு வழக்கத்தின் விதிக்குக் காதலை உட்படுத்தலாமா? ஒத்த மனம் காதலுக்கு'விதியாக வேண்டுமேயொழிய, ஒரு விதியாகலாமா? அவ்விதிய்ைக் காதலன் நிறைவேற்றவில்லையென்றாலும், வேறொருவன் நிறைவேற்றினான் என்றாலும், பெண்ணின் பெருமை என்னாகும்? உள்ளப் புணர்ச்சியை உயிர்நாடியாக உடைய அகத்திணைக்கு ஏறுதழுவும் துறை ஏற்குமா? ஏலாது. இங்ங்ணம் ஒரு சொல்லால் விடைகூறி விடலாம். செவ்விய அகத்திணை வகுத்த நம் தமிழ் மூதறிஞர்களே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/161&oldid=1238496" இலிருந்து மீள்விக்கப்பட்டது