பக்கம்:தமிழ்க் காதல்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

தமிழ்க் காதல்



- என்ற தொல்காப்பியப்படி, தமிழகம் கடல் சூழ்ந்தது எனவும் அதன் நிலவியற்கை நால்வகை எனவும் அறியலாம். நம் நாட்டமைப்பைக் காட்டுவதற்கென்றே தோன்றியது நானிலம் என்னும் சொல். அகவிலக்கணத்து வரும் ஐந்திணைக் குறியீடு நிலவகை பற்றியதன்று, காதலின் ஒழுக்கவகை பற்றியது என்று முன்னதிகாரத்திற் கற்றோம். இதனால் நிலவடிப்படை முற்றும் மறுக்கப்பட்டது என்பது கருத்தாகாது. குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்ற காதல்வகை நான்கிற்கும் நிலவகைகள் வகுக்கப் பட்டுள. தமிழகம் அத்தகைய நிலப்பாங்குகள் உடைமையே அதற்குக் காரணம். பாலைக்காதலுக்கு நிலங் கூறவில்லை. கூறாமைக்குக் காரணம் தமிழகத்துச் சகாரா போன்ற நிலப்பாங்கு இல்லை; பாலை நிலம் இன்று; எனவே பாலைநில மக்கள் என்பாரும் இலர் என்பது தெளிவு. அதனாலன்றோ அகத்திணைத் தலைவராகவும் தலைவி யராகவும் இலக்கியத்தில் பாலைநில மக்கள் வந்திலர். காதலர்களின் காட்சிக்குப் பாலைச்சூழ்நிலை கூறப்படாமையும் காண்க. அகத் தினைப் பனுவல்களில் பாலைப் பாடல்களே பெருவாரியன. இப்பாடற்குப் பொருளான காதலர்கள் ஆறலை கள்வர்களும் சூறையாடிகளும் அல்லர்: குறிஞ்சி முதலாம் நானில மக்கள்தாம் என அறிக. அன்னவர்தம் பிரிவுகளே பாலைத்திணைச் செய்யுட்களில் புனையப்படுவன. பாலை ஒருசார் வழிநிலமேயன்றி நிலையான வாழ்நிலம் அன்று. - ? . . . . . . - தமிழ்நாட்டில் நிலத்தாற் பாலை இலதேனும், காலத்தாற் பாலையுண்டு. நிலையான சுரம் இன்றேனும், வந்துபோம் சுரம் உண்டு. கோடை என்னும் காலப்பாலை குறிஞ்சி முல்லைப் பகுதிகளை ஒரிரு திங்கள் நீரற்ற களமாக, வெப்பம் வீசும் சுரமாக, யாதுந் தோன்றாப் பாலைநிலமாக, கடுங்கதிர் ஞாயிற்றின் விருந்தில்லாக மாற்றிவிடுகின்றது. இஃது உண்மைப் பாலையன்று: பாலைப்போலி என்று.நிலவியற்கை தெளிந்த இளங்கோ "பாலை என்பதோர் படிவங் தொள்ளும்” என்றார்; ஒருகாலச் செயற்கைத் தோற்றம் உடைய,அவ்வளவே என்று சுட்டின்ார். கோடை நீங்கிக் கார், பொழியுங்காலை, இச் செயற்கைப்பாலை ஒழிந்துபோம். மீண்டும் குறிஞ்சி முல்லைத் திணைகள் பலதிங்கள் நீர் ப்ெற்று நிலம் தழைத்துப் பயிர்களை ஈனும், இரண்டு திங்கட்பாலையேயாயினும்: இதுவிளைக்கும் வெம்மைக்கு அளவின்று. நன்னலத்தொடு பன்னாள் இருந்தானைச் சின்னாட் காய்ச்சல் கொல்லவில்லையா? காய்ச்சற் புடம் கொண்ட பலர் நோயணு ஒழிந்து உடலுரமும் வளமும் நிறமும் பெற்றிலங்கக் காண்கின்றோம். தமிழகத்தின் நிலச்சுரம் மக்களின் உடற்சுரம் போல்வது. கதிர் தெறுதலால் தமிழ்நிலமகள்,காய்ச்சற்பாடு உறுகின்றாள்; பெய்யும் மாரியைத் துளியும் விடாது வாங்கிக் கொண்டு எழில் காட்டுகின்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/164&oldid=1238499" இலிருந்து மீள்விக்கப்பட்டது