பக்கம்:தமிழ்க் காதல்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

151



அன்புப் பாலை

சின்னாட் செயற்கைக் கொடுஞ் சுரத்தைக் காதலோர்தம் அன்பின் நிலைக்களமாக்கினர்; வறண்ட் பாலைத்தடத்தை அன்பு நீர் சுரக்கும் ஆயிர உள்ளங்களின் பிரிவுப் பாடல்களுக்குக் கற்பனைச் செய் ஆக்கினர் தமிழ்ப் புலனேர் உழவர்கள். இஃதோர் இலக்கியப் புதுமையுட் புதுமைகாண். கோடைக் காலன் ஒருசார் குறிஞ்சி மாக்களைக் கொள்ளையர்கள் ஆக்குகின்றான். அக்கொள்ளையர் வழிநடையாளரை அச்சுறுத்திப் பொருள் பறித்துக் களவேர் வாழ்க்கை நடத்துவர். இப்பாலை மறவர்கள் நாடு காக்கும் படைமறவர்கள் போல்வாரல்லர்: அஞ்சியோடும் எளிய மக்களைத் தன்னலங்கருதி அடித்துக் கொல்லும் வன்கண்ணர் ஊராண்மை என்னும் கண்ணோட்டம் இல்லாக் கழி பெருங்கொடிஞர். வலிமுன்பின் வல்லென்ற யாக்கைப் புலிநோக்கிற் சுற்றமை வில்லர் கரிவளர் பித்தையர் அற்றம்பார்த் தல்கும் கடுங்கண் மறவர்தாம் கொள்ளும் பொருளில ராயினும் வம்பலர் துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வெளவலிற் புள்ளும் வழங்காப் புலம்புகொள் ஆரிடை (கலி. 4) வல்லுடலும் புலிக்கண்ணும் பறட்டைத் தலையும் விற்கையும் கொண்ட மறவர்கள் வருகுநர் சோர்வு பார்த்து வழி மறைந்து கிடப்பர். பறிக்கும் பொருளிலதேனும் அடிப்பர்; அடிக்குங்கால் துடிக்கும் மெய்ந்நிலையைக் கண்டு இன்புறுவர். அவ்வழி நிலத்திடை மக்களும் நடவார். வான்வழிப் பறவைகளும் ஒடா. இக்கடிய அருஞ்சுரத்தின்கண் ஆருயிர்த் தலைவன் செல்வதை தலைவி உடன்படுவாளா? பொருள் வேண்டுந்தான், கடமைகளைச் செய்ய வேண்டுந்த ன் என்பதற்காக, இல்லற அன்பனை இழக்கும் நெறியில் ஏகவிடுத்து அன்பி வாளா இருப்பாளா? அவளது பெருங்கவலை பாலைச் செய்யுள்களின் பொருளாகும். பாலை நெறிகள் இன்னா வேனும், பாலைத்துறைகள் அன்பின்பாலன நல்வாழ்வுக்கு இனியன: செறிந்த கூடலை அளிப்பன. பிரியாத புணர்ச்சியும், புணராத பிரிவும் உள்ளத்தையும் உடலையும் வளர்க்கா, கெடுக்கும். இடையீடு உடைய புணர்வு பிரிவுகளே அன்பை வளர்த்து ஆர்வத்தை மிகுத்து அறிவைத் துண்டி நெஞ்சினைச் செவ்விதாக்கி, உவரா இன்பத்தை நெடிது தரும். பாலைக்கொடுநெறி அன்பின் நெறியைப் பெருக்குதலின், பெருகிய அன்பினைப் புலப்படுத்தலின், சங்கச் சான்றோர் பாலைத்திணையைப் பாடல்சால் திணையாக மதித்துப் பாடினர். வடவேங்கடம் தென்குமரி இடைப்பட்ட தமிழக எல்லைக்குள் நிலையான பாலை இல்லை; எனினும் பல பாலைப் பாடல்களில் நிலையாய சுரம் புனையப்படுதலைக் கற்கின்றோம். இச்சுரங்கள் வேங்கடத்திற்கு வடபால் உள்ள பிறநாட்டுப் பகுதிகளாம். *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/165&oldid=1238501" இலிருந்து மீள்விக்கப்பட்டது