பக்கம்:தமிழ்க் காதல்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

155


திசையறியாமை, உணவின்மை, நன்னீரின்மை முதலான இடையூறு களையும், அவற்றை எண்ணிப் பார்த்துத் தலைவிபடும் அவலங் களையும், கட்ல்நீந்தித் திரைக்கையால் கரையடைந்த தலைவன் துய்க்கும் ஆராப் புணர்வுகளையும் சொல்லும் பாலைக்கடற் பாடல்களைப் பெரிதும் பெற்றிருப்போம். சங்கப்புலவர்கள கடற்பாலையை மறந்தனர்காண். நிலப்பாலையே பாலையென மயங்கி விட்டனர் போலும். கடுங்கதிர்க் கனலியின் வெப்பம், நீரின்மை, நிழலின்மை, தஞ்சமின்மை, கானல்நீர், சுரம்வாழ் உயிர்களின் வாட்டம், வன்கண்ணர்தம் வழிப்பறி, பொருளச்சம், உயிரச்சம் விலங்கச்சம், நெறியின் கரடுமுரடு ஆகிய பல்லுறுகளை வேறு வேறுபடப் புனைந்து காட்டும் பழந்தடத்திலேயே சங்கச்சால்பினர்தம் மனம் சென்றது, இயல்பாக ஒடியது, கவிதை வளமபடடது. . . . . நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே (தொல், 956) பாலைத்திணையின் பொழுதுகளாகக் கோடையையும் நண்பகலையும் தொல்காப்பியர் வகுத்திருத்தலின், அப்பொழுதுகள் நிலப்பாலைக்குநனிபொருந்துதலின், சங்கக் கவிஞர்கள் தலைவன் தன் சுரவழிச் செலவையே வழிவழிப் பிரிவுதான் பிரிவெனவும் தொல்காப்பியம் வரையறவு செய்யவிலலை. “பின்பணிதானும் உரித்தென மொழிப” (தொல், 955), எனப் பாலைக்கு மேலும் ஒரு பெரும்பொழுது வகுப்பர் ஆசிரியர். கலத்திற் பிரிவு நோக்கியே இப்பணிப் பொழுது பாலைக்கு வகுக்கப்பட்டது என்று கருதலாம். எனினும் கலத்துப் பாடல்கள் தோன்றவில்லை.“தலைமேல் வெம்மை, காற்கீழ் வெம்மை, நெஞ்சத்துள் வெம்மை, இந்நிலையில் பாலைச் செலவினர் பெரும் பாழான தோற்றத்தைக் காண்கின்றனர்” என்று விளக்கஞ் செய்வர் தனிநாயகர், வெம்மை வளம் மிக்க சுரமும், அச்சுரத்துக் கோடைக் காலமும், அக்கால நண்பகலும், பிரிந்தாரின் காதற் சரத்தையும் கவலைக்கொதிப்பையும் பெருக்க வல்லவை.உள்ளக் கொதிப்பை நிலக்கொதிப்பும் காலக்கொதிப்பும் காட்டுவன. ஆதலின் சங்கத்தார். நிலவழிப் பிரிவுகளையே பாலைத்திணையாகப் பாடினர் போலும். கடல்வழிப் பிரிவாயின், நிலவெம்மையும் கால வெம்மையுமாகிய புறக்கொடுமையைப் புனைதற்கு இடமில்லைகாண் முல்லைத்திணையும் கார்காலமும் பாலைத் தினைச் செய்யுட்களைக் கோடைக்காலம் வளஞ்செய்தல் போல, முல்லைத்திணைச் செய்யுட்களைக் கார்காலம் வளப்படுத்தக் காணலாம். தலைவன் மேற்கொண்ட 1. Nature in Ancient Tamil Poetry. P. 147.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/169&oldid=1238506" இலிருந்து மீள்விக்கப்பட்டது