பக்கம்:தமிழ்க் காதல்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

தமிழ்க் காதல்


பாடல்களுள் ஒன்றே ஒன்று தலைவன் தன் நாவாய்ச் செலவையும், அப்பிரிவுக்குத் தலைவி ஆற்றாமையையும் பொருளாகக் கொண்டது. இஃது ஒரு பாலைப் பாட்டு. - உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம் புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ இரவும் எல்லையும் அசைவின் றாகி விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்டக் கோடுயர் திணிமணல் அகன்றுறை நீகான் மாட வொள்ளெரி மருங்கெறிந்த தொய்ய ஆள்வினைப் பிரிந்த காதலர் நாள்பல கழியா மையே அழிபடர் அகல வருவர் மன்னால் தோழி (அகம். 255) கடற்பிரிவு என்பதனை முதலடியே காட்டுகின்றது. 'உலகு கிளர்ந்தன்ன என்ற உவமையாலும், பெருங்கடல் நீரைப் பிளந்து சென்றது என்ற கருத்தாலும், வங்கம் என்பது மிகப் பெருங் கப்பல் என்று அறியலாம். மீகாமன் காற்றின் இயக்கத்தை அறிந்து இரவும் பகலும் சோராது வங்கத்தை ஒட்டுவிான் எனவும், நகரின் மாடவிளக்குக்களை நோக்கிக் கரைசேர்ப்பான் எனவும், முதல் ஆமடிகள் கடற்செலவை ஓரளவு புனைகின்றன. இப்புனைவு நயமில்லை என்பது வெளிப்படை பாலை நிலச் செலவைத்தான் வளம்படப் பாடும் திறம் சங்கப்புலவர்க்கு இருந்தது. அத்திறந்தான் அக்காலத்து வளர்க்கப்பட்டது. நிலத்திணைப் பாடல்கள்தாம் மிகவும் பயிலப்பட்டது. நிலத்திணைப் பாடல்கள்தாம் புதிய கற்பனையோடு மேலும் படைக்கப்பட்டன. இக்கல்விச் சூழ்நிலையில் மருதன் இளநாகனாரின் கடற்பாட்டு நல்ல கவிதையாகத் தோன்றுதற்கு இடனில்லை. அவர் கடற்பாட்டு ஒன்றினைப் பாடிய அத்துணைக்கே தனிப்பெருமை யுடையவர் ஆகின்றார். நிலத்திணையில் தேர்ப்பாகன் கூறப்படுவான். இந்நீர்த்திணையில் கப்பலோட்டியை இளநாகனார் அமைக்கின்றார். நிலப்பாலையில் முதுவேனிலும் நண்பகலும் வரும். இந்நீர்ப் பாலையில், - அறனின் றலைக்கும் ஆனா வாடை கடிமனை மிாடத்துக் கங்குல் வீச எனப் பின்பணிப் பெரும்பொழுதும் கங்குற் சிறுபொழுதும் வந்திருத்தல் காண்க. ஆலங்குடி வங்கனார் ஒரு சங்கப் புலவர், வங்கப் பெயர் பெற்றிருந்தும், இவர் பாடல்களில் கடற் குறிப்பு இல்லை. பாலைத்திணைக்கண் கடற்பிரிவைப் பாடியிருந்தால், புதிய பல் இலக்கியப் புனைவுக்கு வாய்ப்பு உண்டு. அலைகடல் நடுவண் சாடிiசும் கடும்புயல், கடற்கொள்ளை, சுறாமீன்களின் தாக்கு, பாறைமோது பாய்மரமுறிவு, பாய்கிழிவு, கலங்கவிழ்வு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/168&oldid=1238505" இலிருந்து மீள்விக்கப்பட்டது