பக்கம்:தமிழ்க் காதல்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

157



XVII

3. உளவியல் அடிப்படை

ஈண்டு உளவியல் என்பது என்ன? அகவிலக்கியத்தைப் படைத்தது தமிழினம். அதனைப் படைப்பதற்கு அந்நல்லினம் பெற்றிருந்த தனி மனக்கூறு எது, அது நாம் காணுதற்கு உரியது. தமிழ்ச் சமுதாயம் அகத்திணைக்குத் தளமிட்டது. தமிழ் நாட்டின் பூதவியல்பு அத்தளத்திற்கு வேண்டும் கட்டிடப் பொருள்களை நல்கிற்று. தமிழினத்தின் தனி நெஞ்சியல் காண் அகத்தினை எண்ணத்தையே உண்டாக்கிற்று. இந் நெஞ்சியல் இன்றேல் தளம் ஏது? கட்டிடப் பொருள்கள் எற்றுக்கு? கருவற்ற வயிற்றுக்குப் பிறவற்றாற் பயனென்கொல்? தமிழினத்தின் எண்ணக் கருவை நன்கு விளங்கிக் கொண்டாலன்றி, அவ்வினம் தோற்றிய இலக்கியப் படைப்பை நாம் அணுகி அறிந்துகொள்ள இயலோம். எண்ணம் தெரியாது காதலாடலாமா? - ; ; ; ; ; - தமிழர் இயற்கையோடு பெருங்கேண்மையினர்; நிலம் புல் மரம் புள் விலங்கு என்றின்ன அஃறிணைகள்ைப் பற்றிய அறிவு இயல்பாக நிரம்பியவர்; அன்னவர்தம் இயற்கைப் பேரறிவுக்கும் தொடர்புக்கும் சங்கவிலக்கியத்தின் ஒவ்வோரடியும் சான்று எனப் பலர் எழுதல் இன்று வழக்காறாயிற்று. பண்டைத்தமிழர் என்ன, உலகின் எப்பகுதிக் கண்ணும் வாழ்ந்த பண்டை மக்கள் என்பார் இயற்கையோடு அகலாத் தொடர்புடையவரே, இயற்கை யாசானிடமிருந்து எல்லாம் கற்றவரே. ஆதலின் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை தொல் தமிழர்க்கு மட்டும் உரியதன்று; தொன்மாந்தர்க்கெல்லாம் பொதுமையதே. இயற்கை வாழ்வு பொதுவதேனும், அதன் ஆட்சி, அது மக்கள் உள்ளத்தில் எழுப்பும் எண்ணம் வெவ்வேறாகும். இயற்கைத் தன்மை என்பது வேறு! அஃது என்றும் மாறாதது அகநிலையானது. இயற்கையாட்சி என்பது வேறு. அஃது ஆளப்படுவார் உள்ளத்தைப் பொறுத்தது, அவர் உள்ளத்தை வெளிப்படுத்துவது. உள்ளத்திற் கேற்ற எண்ணத்தையே உறுவிப்பது. எனவே புறநிலையானது, இயற்கைதான் ஒரு தன்மைத்தாயினும், எல்லார் மாட்டும் செய்யும், தாக்குதல் பலதன்மைத்து. ஏன்? தாக்கப்படுவார் பலதன்மையினர், பல்வகை எண்ணக் கிளையினர், ஆதலின் மனிதன் பண்டு அடர்ந்த இயற்கை நடுவண் இருந்தான், இயற்கையோடு உறவுற்றான் என்று பொதுப்படையாக மொழிவதைக்காட்டிலும், இயற்கை தன்னைச் சூழ்ந்த மக்களின் மனத்தை எவ்வெண்ண வாயிலாக ஊடுருவிற்று? அம்மக்கள் இயற்கையின் பல்பொருள்களைக் காணுந்தோறும் கேட்குந்தோறும் சொல்லுந்தோறும் தம் நெஞ்சகத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/171&oldid=1238508" இலிருந்து மீள்விக்கப்பட்டது