பக்கம்:தமிழ்க் காதல்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

தமிழ்க் காதல்


எவ்வெண்ணப் பான்மையை வளர்த்துக் கொண்டனர்? வளர்க்க இடங் கொடுத்தனர்? என்று வரையறுத்துக் காண்பது நன்று. அகத்திணைச் செய்யுட்களில் பரந்து செறிந்து கிடக்கும் இயற்கைப் புனைவுகளையும் அப்புனைவுகளுள் மறைந்தோடிக் கிடக்கும் ஒருபெரும் தன்மையினையும் ஆராய முனைந்தால், பண்டைத் தமிழின்த்தின் தனிமனக்கூறு தெளிவாகத் தோன்றும். அக் கூறுதான் அகத்திணைப் படைப்பிற்கு முதற்காரணமாம். மக்களின் முதன்மையும் இயற்கையின் துணைமையும் தமிழர்கள் இயற்கையை இயற்கைக்காக இயற்கையாகக் காதலித்தார் அல்லர்; வேறொன்றும் நோக்காது அழகு நோக்கியே அதன் பூப்பிலும் பொலிவிலும் வனப்பிலும் ஈடுபட்டு அகமகிழ்ந்தார் அல்லர். தமிழர் இயற்கையின் பாவை அல்லர். இயற்கை தமிழரின் எண்ணப்பாவை, வாழ்க்கைக் கருவி. ம்லையையும் மானையும் கடலையும் மீனையுங் காரையும் பொழுதையும் செடியையும் கொடியையும் ஒரு பயன் நோக்கியே பார்வை செலுத்தினர். சங்கவிலக்கியம் ஏறத்தாழ ஈராயிரத்து நானூறு பாடல் கொண்டது. எல்லாம் தனிச்செய்யுட்களே. எனினும் இயற்கையைத் தனிப்பொருளாகக் கொண்டு அதன்மேல் எச்செய்யுளும் எழுந்ததில்லை. சங்கப் புலவர்கள் ஏறத்தாழ ஐந்நூற்றுவர். தனி இயற்கைப் புலவராக யாரும் இலர். பாலைபாடிய பெருங்கடுங்கோ எனின், பாலைத்திணையின் உரிப்பொருள் பாடிய புலவர்.என்பதுவே கருத்தாம்; பாலையின் முதலையும் கருவையும் பாடியவர் என்பது கருத்தன்று. முதலும் கருவும் உரிப்பொருளுக்குத் துணைப் பொருளேயன்றிப் புலவனுக்குப் பாடற் பொருளன்று. துறைப் பொருளன்று, தலைமைப் பொருளன்று. பெருங்கடுங்கோ அகப்புலவரேயன்றி, இயற்கைப்புலவர் அல்லர். இவ்விளக்கம் மருதன் இளநாகன், குறிஞ்சிக் கபிலன் என்பவற்றிற்கும் பொருந்தும். ஆங்கில இலக்கியத்தில் இயற்கைப் புலவர் பலர் உள்ர். பூவும் வானம்பாடியும் பாம்பும் வாவலும் ஏரியும் மேகமும் மலையும் அன்னவர்க்குத் தலைமைப்பாடுபொருளாகும். இவ் விலக்கியமுறை இந்நூற்றாண்டு முதலே தமிழகத்துப் பரவி வருகின்றது. இன்று இயற்கைப் புலவர்கள் தமிழ் மொழியில் பல்கி வருவர். குழந்தைப் பாடல்களில் இயற்கை மிக இடம் பெறுகின்றது. - - - தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே துள்ளிக் குதிக்குதுகன்றுக் குட்டி அம்மா என்குது வெள்ளைப்பசு - உடன் அண்டையில் ஓடுது கன்றுக் குட்டி: நாவால் நக்குது வெள்ளைப்பசு - பாலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/172&oldid=1238509" இலிருந்து மீள்விக்கப்பட்டது